ஜெயம் ரவியை நம்ம விருப்பப்படி எப்படியும் மாத்த முடியும்.. பிரதர் பட இயக்குநர் ராஜேஷ் ஓபன்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி -எம் ராஜேஷ் கூட்டணியில் உருவாகியுள்ளது பிரதர் படம். இந்த படம் தீபாவளி கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஜெயம் ரவி, இயக்குனர் எம் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்று பல பேட்டிகளை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஜெயம் ரவி குறித்தும் பிரதர் படம் குறித்தும் பல்வேறு சுவாரசியங்களை படத்தின் இயக்குனர் எம் ராஜேஷ் அடுத்தடுத்து கூறி வருகிறார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. முதல் பாடலாக வெளியான மக்காமிஷி பாடல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

jayam ravi brother movie m rajesh

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. ஜெனீ, காதலிக்க நேரமில்லை, பிரதர் என அடுத்தடுத்த படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்ததாக எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரதர் படம் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் சிறப்பாக வெளியிடப்பட்டு வரும் நிலையில் முன்னதாக வெளியான படத்தின் மக்காமிஷி பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பிரதர் படம்: பிரதர் படத்தில் ஜெயம் ரவி -ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி நீண்ட காலங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படம் இந்த மாத இறுதியில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக அடுத்தடுத்து இயக்குனர் எம் ராஜேஷ் பேட்டிகளை அளித்து வருகிறார். அந்த வகையில் அவர் ஜெயம் ரவி குறித்தும் பிரதர் படம் குறித்தும் பல்வேறு சுவாரசியங்களை வெளியிட்டு வருகிறார். காமெடி என்டர்டைன்மென்டாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்தது குறித்து ராஜேஷ் மிகப்பெரிய உற்சாகத்தை தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி குறித்து ராஜேஷ் ஓபன்: ஜெயம் ரவியிடம் ஒரு கதையை சொல்லி ஓகே வாங்குவதுதான் கடினம் என்றும் அவரிடம் ஓகே வாங்கி, கதை குறித்த தெளிவு அவருக்கு வந்துவிட்டால், அவர் இயக்கத்தில் தலையிட மாட்டார் என்றும் எம் ராஜேஷ் கூறியுள்ளார். ஜெயம் ரவி ஒரு முழுமையான நடிகர் என்றும் அவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்றும் அதனால் ஜெயம் ரவியுடன் இணைந்து படம் செய்வது மிகவும் விருப்பமாக இருந்ததாகவும் எம் ராஜேஷ் தனது பேட்டியில் கூறியுள்ளார்

ரசிகர்கள் கேள்வி: ஜெயம் ரவியை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்று எம் ராஜேஷ் கூறியுள்ளது மிகப்பெரிய கேள்விகளை தற்போது ரகிர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளார் ஜெயம் ரவி. முன்னதாக அவரது மாமியார் வீட்டில் நிதி நெருக்கடியை சந்தித்ததாக அவர் வெளிப்படையாக பேசியுள்ள நிலையில் தற்போது எம் ராஜேஷ், ஜெயம் ரவியை எப்படி வேண்டுமானாலும் நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றலாம் என்று கூறியுள்ளார். படங்களில் ஜெயம் ரவி கேரக்டர் மாற்றம் குறித்து ராஜேஷ் கூறிய நிலையில் இதை அவரது பர்சனல் வாழ்க்கையில் இணைத்து ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X