Madonne Ashwin: மாவீரன் க்ளைமாக்ஸ் ரசிகர்களுக்கு சரியா போய் சேரலை.. இயக்குநர் வருத்தம்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகிபாபு, சரிதா, மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது மாவீரன்.

மாவீரன் என்ற கேரக்டர், மக்களுக்கு செய்யும் நன்மைகளை மையமாக கொண்டு, இந்தப் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.

பயந்தாங்கொள்ளியாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஏற்படும் வித்தியாசமான அனுபவம் அவரது வாழ்க்கையில் எப்படி மாற்றுகிறது என்பதை இந்தப் படம் சொன்னது.

Director Madonne Ashwin opens up about Sivakarthikeyans Maaveeran movie climax

மாவீரன் க்ளைமாக்ஸ் குறித்து வருந்திய மடோன் அஷ்வின்: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, யோகிபாபு, மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 14ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசான படம் மாவீரன். படத்தில் பயந்தாங்கொள்ளியாக இருக்கும் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் நடக்கும் வித்தியாசமான சம்பவம் அவரது வாழ்க்கையையும் அவரை சேர்ந்த மக்களின் வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது என்பதை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.

சிவகார்த்திகேயன், எழுதும் காமிக் கேரக்டர் மாவீரன், நிஜத்தில் அவர் மூலமாகவே வெளிப்பட்டால், உயிருக்கு போராட்டமான சூழ்நிலையில் இருக்கும் அவரை சேர்ந்த மக்களை அதிலிருந்து காப்பாற்றினால் என்பதை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. முன்னதாக மண்டேலா என்ற படத்தை கொடுத்திருந்த மடோன் அஷ்வின், முந்தைய கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தற்போது மாவீரன் படத்தை இயக்கியுள்ளார்.

தான் விரும்பாத ஒரு விஷயம் தனக்குள் திணிக்கப்பட்டுள்ளதாக கருதும் நாயகன், அது தன்னிடமிருந்து போக வேண்டும என்று விரும்புகிறார். யாருக்கும் கிடைக்காத இந்த பாக்கியம் அவருக்கு கிடைத்ததாக அவரை சூழ்ந்தவர்கள் கூறியும், அவருக்கு அந்த திணிப்பு பிடிக்காததாகவே காணப்படுகிறது. யாருடனும் முட்டிக் கொள்ளாமல் இயல்பான வாழ்க்கை வாழ்வதே அவரது விருப்பமாக உள்ளது. இந்நிலையில், அவருக்குள் வரும் சக்தி, மீண்டும் அவரை விட்டு போக, அதற்காக மீண்டும் ஏங்குகிறார்.

அந்த சக்தி தன்னை விட்டு அகன்றாலும், அது இருந்தபோது சொன்ன விஷயங்கள், தன்னுடைய காதிற்குள் ரீங்காரமிட, அதை செயல்படுத்துகிறார் நாயகன். அந்த வகையில், இறுதியில் தீக்குள் மாட்டிக் கொள்ளும் இளவரசியை காப்பாற்றுகிறார். தான் துவங்கிய கதையை தானே முடிப்பதாக அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் அமைந்தது. ஆனால், தான் நினைத்ததற்கு மாறாக இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் வேறுவகையில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்ததாக மடோன் அஷ்வின் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த இறுதிக்காட்சியில் தன் உயிரைக் கொடுத்து மக்களை காப்பாற்றினான் என்ற வாய்ஸ் ஹீரோவிற்கு நினைவிற்கு வரும் மேலும் அது தன்னுடைய கதை என்றும் அதை தான்தான் முடித்து வைக்க வேண்டும் என்றும் தான் அவர் தீயில் மாட்டிய இளவரசியை காப்பாற்ற சென்றதாகவும் ஆனால், தீயில் மாட்டிய சிறுமியை காப்பாற்றவே ஹீரோ போவதாக புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும் மடோன் அஷ்வின் மேலும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தான் சொல்ல வந்த கருத்து ரசிகர்களால் மாற்றி புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தான் நினைத்த க்ளைமாக்ஸ் காட்சியை அவர்களிடம் சிறப்பாக எடுத்து செல்ல முடியவில்லை என்ற நிலையில், தன்னுடைய ரைட்டிங் மற்றும் மேக்கிங் சிறப்பாக இல்லை என்பதே வெளிப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் தனக்கு பாடம் கிடைத்துள்ளதாகவும் மடோன் மேலும் கூறியுள்ளார். தான் கூறவந்த க்ளைமாக்ஸ் காட்சி, தானாகவே புரிந்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X