Madonne Ashwin: மாவீரன் படத்துல சிவகார்த்திகேயனுக்கு காமெடியே கிடையாது.. மடோன் அஸ்வின் பளீச்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதீதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க மாவீரன் படம் வரும் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் படத்தில் சிவகார்த்திகேயனின் வில்லனாக நடித்துள்ளார்.
படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளது. தெலுங்கில் மாவீருடு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

மாவீரன் குறித்து பேசிய மடோன் அஸ்வின்: நடிகர் சிவகார்த்திகேயன், அதீதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மாவீரன். டாக்டர், டான் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், கடந்த தீபாவளிக்கு வெளியான அவரது பிரின்ஸ் படம் சொதப்பியது. இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் மாவீரன் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவில் வெளியிடவுள்ளது.
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளார். மண்டேலா படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இவர் மண்டேலா படத்திற்கு இசையமைத்திருந்தார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. தெலுங்கில் மாவீருடு என்ற பெயரில் படம் வெளியாகவுள்ளது.
முன்னதாக இந்தப்படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவிருந்த நிலையில், ஜெயிலர் படத்தின் ரிலீசையொட்டி, படம் முன்னதாக ஜூலை 14ம் தேதியே திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரின்ஸ் படம் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக கைக்கொடுக்காத நிலையில், மாவீரன் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீடு வரும் ஜூலை 2ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். பேட்டிகளையும் கொடுத்துவருகின்றனர். இதனிடையே, தான் இந்தப் படத்திற்காக எந்தவிதமான சமரசமும் செய்துக் கொள்ளவில்லை என்றும் தான் உருவாக்கிய கேரக்டரில் சிவகார்த்திகேயன் சிறப்பாக பொருந்தினார் என்றும் படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் கூறியுள்ளார். அவருக்காக எந்த காட்சியையும் தான் மாற்றவில்லை என்றும் மாற்ற வேண்டுமென்று சிவகார்த்திகேயனும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் என்றாலே காமெடி என்பது எழுதப்படாத சட்டமாக உள்ள நிலையில், இந்தப் படத்தில அவருக்கு காமெடியே கிடையாதாம். அவரை சுற்றியுள்ளவர்கள் மட்டுமே காமெடி செய்வார்கள் என்றும் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் படத்திற்காக சின்ன சின்ன ஆலோசனைகளை கூறியதாகவும் அது படத்திற்கு மிகவும் உதவியதாகவும் அவர் மேலும் கூறினார். ஸ்கிரிப்ட் குறித்து சிவகார்த்திகேயன் அதிகமாக அறிந்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











