பாக்சர் ஆர்யாவுக்கு வில்லனாகிறாரா? பா.ரஞ்சித்தின் 'சல்பேட்டா பரம்பரை'யில் இயக்குனர் மகிழ் திருமேனி

By

சென்னை: பா.ரஞ்சித்தின் 'சல்பேட்டா பரம்பரை' படத்தில் இயக்குனர் மகிழ்திருமேனி வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தினேஷ் நடித்த அட்டகத்தி படம் மூலம் இயக்குனரானவர் பா.இரஞ்சித். அடுத்து கார்த்தியின் மெட்ராஸ், ரஜினியின் கபாலி, காலா படங்களை இயக்கினார்.

காலாவைத் தொடர்ந்து பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டாவின் வாழ்க்கைக் கதையை அவர் படமாக்க இருப்பதாகக் கூறப்பட்டது. நமா பிக்சர்ஸ் இதைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

சல்பேட்டா பரம்பரை

சல்பேட்டா பரம்பரை

இந்நிலையில், அந்த படத்தின் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்போது, சல்பேட்டா பரம்பரை என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட இதன் கதை, வடசென்னையில் நடந்த உண்மைச் சம்பவம் என்று கூறப்படுகிறது. இதில், ஹீரோவாக ஆர்யாவும் கலையரசனும் நடிக்கின்றனர்.

ஆர்யா பயிற்சி

ஆர்யா பயிற்சி

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்காக, ஆர்யாவும் கலையரசனும் கடந்த சில மாதங்களாகக் குத்துச்சண்டைப் பயிற்சிப் பெற்றனர். இதன் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. இதில் அட்டகத்தி தினேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மகிழ் திருமேனி

மகிழ் திருமேனி

இப்போது இதில் இயக்குனர் மகிழ் திருமேனியும் இணைந்துள்ளார். இவர், புதுமுகங்கள் பார்த்த முன்தினம் பார்த்தேனே, அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க, ஆர்யாவின் மீகாமன், அருண் விஜய்யின் தடம் படங்களை இயக்கியவர். காக்க காக்க படத்தில் டேனியல் பாலாஜிக்கும், இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப்புக்கும் டப்பிங் குரல் கொடுத்திருந்தார்.

விஜய் சேதுபதி வில்லன்

விஜய் சேதுபதி வில்லன்

இந்நிலையில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துவருகிறது. இதையடுத்து சல்பேட்டா பரம்பரை படத்திலும் அவர் வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூரவ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X