விடாமுயற்சி கதையை அஜித் தேர்ந்தெடுக்க காரணம்..மகிழ் திருமேனி பகிர்வு.. அட இப்படி ஒரு விஷயம் இருக்கா?
சென்னை: நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ் என முன்னணி நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடாமுயற்சி படம் கடந்த 6ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் வெளியாகி உள்ளது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் கடந்த இரு தினங்களில் 35 கோடி வசூலை படம் நெருங்கியுள்ளது.
தொடர்ந்து வார இறுதி நாட்கள் வருவதால் விடாமுயற்சி படத்தின் வசூல் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பிரமோஷன்களில் அதிகமாக கலந்து கொண்ட இயக்குநர் மகிழ் திருமேனி, தற்போது அஜித் இந்த படத்தின் கதையை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என தெரிவித்துள்ளார்.

விடாமுயற்சி படம்: கடந்த 6ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது அஜித்தின் விடாமுயற்சி. மகில் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த இரு தினங்களில் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 35 கோடி வசூலை நெருங்கியுள்ளது. படத்தில் அர்ஜுன் என்ற கேரக்டரில் சாதாரண மனிதனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கேரக்டரில் அஜித் நடித்துள்ளார். அஜித் படங்கள் என்றாலே அதிரடி ஆக்ஷன் களத்திலும் பின்னி பெடலெடுக்கும். இதேபோல மகிழ் திருமேனியின் முந்தைய படங்களிலும் ஆக்ஷன் கதைக்களத்தையே அவர் கொடுத்திருந்தார்.
விடாமுயற்சியை அஜித் தேர்ந்தெடுக்க காரணம்: இந்நிலையில் இவர்கள் இருவரின் கூட்டணியில் அதிகமான ஆக்ஷனை விடாமுயற்சி படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதற்கேற்ப முன்னதாக அஜித் மற்றும் ஆரவ் இணைந்து சில சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளியாகி படத்திற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மிகவும் குறைவு. இடைவேளைக்குப் பிறகு சில காட்சிகள் இருந்த நிலையிலும் அவையும் தீவிரத்துடன் எடுக்கப்படவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை அஜித் தேர்ந்தெடுக்க காரணம் கூறியுள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவும் அடுத்தடுத்தும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் அவர்.
பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்: பெண்களுக்கு அதிகமான மதிப்பு கொடுத்து வருபவர் அஜித் என்றும் அதேபோல பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் படத்தில் நடிக்க வேண்டும் என்று எப்போதுமே கூறுவார் என்றும் மகிழ் திருமேனி கூறியுள்ளார். அதனாலேயே விடா முயற்சி படத்தின் கதைக்களத்தை அவர் தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து அஜித் எப்போதுமே மனதளவில் பாதிப்பை அஜித் உணர்ந்து வருவதாகவும் அதனாலேயே விடாமுயற்சி படத்தின் கதையை பெண்களை மையமாக வைத்து தாங்கள் உருவாக்கியதாகவும் மகிழ் திருமேனி குறிப்பிட்டுள்ளார்.
வசூலை குவிக்கும் படம்: கடந்த 2023ம் ஆண்டில் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருந்தார் அஜித். இந்தப்படத்தில் அவரது கேரக்டர் நெகட்டிவ் ஷேடில் இருந்த போதிலும் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையிலும் விடாமுயற்சி படம் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்து வருகிறது. தொடர்ந்து வாரயிறுதி நாட்களில் படத்தின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











