மகிழ் திருமேனிங்கறது சொந்தப் பேர் இல்லை.. அப்ப உண்மையான பேர்.. விடாமுயற்சி இயக்குநரோட ரியாக்ஷன்!
சென்னை: நடிகர் அஜித்குமார் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில் படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படம் சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் படத்திற்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் ரோட் டிராவலை மையமாக வைத்து கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் மகிழ் திருமேனி, இந்த படத்தின் ரிலீசை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தின் பிரமோஷன்களில் தயாரிப்பு தரப்பு மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும் நடிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அஜித்திற்கு தற்போது பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்கு இதுவும் ஒருவகையில் சிறப்பாக கைக்கொடுத்து வருகிறது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் இன்னும் ஆறு தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ரோட் டிராவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களில் இயக்குநர் மகிழ் திருமேனி ஈடுபட்டுள்ளார். முன்னதாக தடம் உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்துள்ள மகிழ் திருமேனி முதல் முறையாக அஜித்துடன் இணைந்துள்ள விடாமுயற்சி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை அவரது முந்தைய படங்கள் கொடுத்துள்ளன. அஜித்தை வைத்து அவர் எப்படிப்பட்ட படத்தை கொடுப்பார் என்று அறிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விடாமுயற்சி படம்: இந்த படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே நிறைவடைந்த நிலையில், இம்மாதம் பொங்கல் ரிலீசாக படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் பிப்ரவரி ஆறாம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. முன்னதாக இதுகுறித்து தான் வருத்தப்பட்டதாகவும் ஆனால் அஜித், பண்டிகைக்கு படம் வரவில்லை என்று வருத்தப்பட வேண்டாம் என்றும் நம்முடைய படம் வெளியாகும் தினம் தான் பண்டிகை என்று தன்னை சமாதானப்படுத்தியதாகவும் மகிழ் திருமேனி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்ப வரும் பிப்ரவரி 6ம் தேதியை திருவிழாவாக கொண்டாட அஜித் ரசிகர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
மாஸ் காட்டும் பாடல்கள்: இந்த படத்தின் பிரீ புக்கிங் துவங்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டிக்கெட்டுகளைபுக் செய்ய அதிகளவில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே படத்தின் சென்சாரும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா ஜோடி சேர்ந்துள்ள நிலையில் அனிருத்தின் இசையில் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய என்டர்டெயின்மெண்டை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. குறிப்பாக அஜித் மற்றும் த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி பாடல்களில் மிகப்பெரிய அளவில் காணப்பட்டது. படத்தில் கணவன் மற்றும் மனைவியாக இருவரும் நடித்துள்ளனர்.
மகிழ் திருமேனியின் ஒரிஜினல் பெயர்: அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் இல்லாமல் படம் சாமானியனின் வாழ்க்கையை கூறும் வகையில் அமைந்துள்ளதாகவும் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். இதனிடையே மகிழ் திருமேனி என்பது தன்னுடைய சொந்த பெயர் இல்லை என்றும் தான் சினிமாவிற்காக வைத்துக் கொண்ட பெயர் என்றும் மகிழ் திருமேனி தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தன்னுடைய சொந்த பெயரை சொல்ல அவர் மறுத்துவிட்டார். தனக்கு தமிழில் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடே மகிழ் திருமேனி பெயர் என்றும் அவர் கூறியுள்ளார். தனக்கு அரசியல், இலக்கியம் என அனைத்திலும் ஆர்வம் உள்ளதாகவும் நாவல் எழுத விருப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











