அஜித்தின் உண்மையான முகம்.. அவர் ஹீரோ கிடையாது.. மகிழ் திருமேனி பகிர்ந்த விஷயம்!
சென்னை: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தின் ரிலீசுக்காகத்தான் ரசிகர்களை ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்தப் படம் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகவுள்ள அஜித்தின் இந்தப் படம் ரசிகர்களுக்கு அதிகமான உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ரோட் டிராவலை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா ஜோடி சேர்ந்துள்ள நிலையில், அர்ஜுன், ஆரவ் படத்தின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்களை சந்திக்கவுள்ளது

விடாமுயற்சி படம்: நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரிலீசாகவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் முன்னதாக அதிகமான படங்கள் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அஜித்தை கொண்டு அவர் எத்தகைய படத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. ஆனால் சாமானிய மனிதனின் கதையாக விடாமுயற்சி படம் உருவாகியுளளதாக தன்னுடைய பேட்டியில் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். தன்னுடைய உலகத்தை காப்பாற்றுவதற்கான நாயகனின் போராட்டமே இந்தப் படத்தின் கதைக்களம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்தடுத்த பிரமோஷன்கள்: இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. படத்தின் போஸ்டர்கள், டிரெயிலர் என அடுத்தடுத்து மாஸ் காட்டி வருகின்றன. படத்தில் அர்ஜுன் என்ற கேரக்டரில் அஜித்குமார் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் சென்சார் நிறைவடைந்துள்ளதாகவும் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அதிகமான அதிரடி காட்சிகள் இருக்காது என்றும் இயல்பான கதைக்களத்தில் நடுத்தர வயது மனிதராக அஜித் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில், அஜித்தின் அடுத்தடுதுது கெட்டப்புகள் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்து வருகிறது.
தல அடைமொழியை தவிர்த்த அஜித்: இதனிடையே அஜித் தல என்ற அடைமொழியை தவிர்த்தது ஏன் என்று இயக்குநர் மகிழ் திருமேனி தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். பொதுவாகவே இதுபோன்ற அடைமொழிகள், பில்டப் எதிலும் அஜித்திற்கு ஆர்வம் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார். நம் வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஹீரோக்கள் தூரமாக நின்று பார்க்கும் வரையில்தான் அவர்கள் ஹீரோக்களாக தெரிவார்கள் என்றும் நாம் கிட்டே போய் பார்த்தால்தான் நாம் நினைத்ததற்கு மாறாக அவர்கள் இருப்பதை நாம் உணர முடியும் என்றும் மகிழ் திருமேனி மேலுமூ க்ஷதுழீகூதுதுள்ளார்.
அஜித்தின் உண்மையான முகம்: தன்னை பொருத்தவரை அஜித் ஒரு உண்மையான, மென்மையான, அன்பான தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய வழியில் வாழ ஆசைப்படும் ஒரு மனிதனாகத்தான் இருப்பதாகவும் மகிழ் திருமேனி குறிப்பிட்டுள்ளார். இதுதான் அவருடைய உண்மையான முகம் என்றும் அவர் ஹீரோவிற்கான எந்த பில்டப்பும் கொடுக்காதவர் என்றும் கூறியுள்ளார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் படத்தின் பிரமோஷன்களில் பஙகேற்காத அஜித், தற்போது துபாயில் கார் ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதையொட்டி அவர் அடுத்தடுத்து பேசி வருகிறார்.


Click it and Unblock the Notifications











