Ajithkumar: மீண்டும் மீண்டுமா.. அஜித்குமார் எடுத்த முடிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்.. ஆனாலும் கப் சிப்
சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆகவுள்ள படம், விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்தும் அஜித்குமார் குறித்தும் இயக்குநர் மகிழ் திருமேனி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிப்பில் உருவான படம் விடாமுயற்சி. கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் வேலைகள் நடைபெற்று வந்தது. படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டது. அதன் பின்னர் படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படியான நிலையில் படம் குறித்தும், படத்தில் பணியாற்றியது குறித்தும், அஜித்குமார் குறித்தும் இயக்குநர் மகிழ் திருமேனி பல சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றார். அப்போது அவர், அஜித் குறித்து கூறிய பல சுவாரஸ்மான விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியுள்ளது. அதாவது,, “ படத்தில் கமிட் ஆன போது அஜித் சார், ஒன்று கூறினார். பலரும் பலவிதமாக பேசுவார்கள் அதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் என்றார். என்னைப்பற்றியும் படம் குறித்தும் பல தகவல்கள், அதுவும் தவறான தகவல்கள் வந்தபோது, நான் அஜித் சார் சொன்னதைத்தான் நினைத்துக் கொண்டேன்.
மகிழ் திருமேனி: படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் சில பிரச்னைகள் இருக்கின்றது எனத் தெரிந்த பின்னர், எனக்கு லைகாவில் இருந்து போன் செய்து கூறினார்கள். அதன் பின்னர் அஜித்சார் போன் செய்து, நம்ம படம் பண்டிகைக்கு வரலனா என்ன? நம்ம படம் வந்தாலே பண்டிகைதான். கவலைப்படாம வேலை பாருங்க மகிழ் எனக் கூறினார். மேலும், என்னை நம்பி பணம் போட்டுள்ளார்கள். எனக்கு ரேஸில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். நான் ரேஸ்க்கு போவதற்கு முன்னர் அந்த இரண்டு படங்களின் வேலைகளையும் முழுவதுமாக முடித்துக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால், என்னால் ரேஸில் 100 சதவீதம் ஆக்ஸிலேட்டரை அழுத்த முடியாது. 2 படங்கள் உள்ளது. அதன் பணிகளை முடிக்க வேண்டும் என 90 சதவீதம்தான் ஆக்ஸிலேட்டரை அழுத்த முடியும். அதனால் என்னால் ரேஸிற்கு உண்மையாக இருக்க முடியாது எனக் கூறினார். அவரது இந்த வார்த்தைகளை நான் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்.
அஜித் முடிவு: அதேபோல், படப்பிடிப்புகளுக்கு மத்தியில், ஒரு நாள் அஜித் சார், மகிழ் நாம இருவரும் இணைந்து இன்னும் சில படங்கள் வேலை பார்ப்போம் எனத் தோன்றுகின்றது. சிவா, வினோத்திற்குப் பின்னர், உங்களுடன் இணைந்து இன்னும் வேலை பார்க்க வேண்டும் என எனக்குத் தோன்றுகின்றது எனக் கூறினார்” என மகிழ் திருமேனி அந்த பேட்டியில் கூறியுள்ளார். இவரது இந்த பேச்சினைக் கேட்ட, ரசிகர்கள், அஜித் ஏன் இப்படி செய்கின்றார். படம் வரட்டும் அப்பறம் பேசிக்கலாம் என கப் சிப் மோடில் உள்ளார்கள் என்ற தகவலும் உலா வருகின்றது.


Click it and Unblock the Notifications











