அஜித்தை கவர்ந்த மகிழ்திருமேனியின் ஸ்கிரிப்ட்கள்..என்ன மாதிரியான கதை தெரியுமா?
சென்னை : நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் மகிழ்திருமேனி ஏகே62 படத்திற்காக இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
லைகா தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக துணிவு படத்தின் ரிலீசை தொடர்ந்து வெளிநாட்டில் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த மாதம் 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியிருந்தார். படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார்.

அஜித்தின் துணிவு படம்
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித் -ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்திருந்தது. இந்தப் படத்தில் அஜித்தை ரசிகர்கள் ஏற்கும்வண்ணம் கொடுத்திருந்தார் ஹெச் வினோத். வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு படம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.

ஏகே62விற்காக ரசிகர்கள் வெயிட்டிங்
படத்திற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்டமான அளவில் வங்கி மற்றும் மவுண்ட் ரோடு செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. படத்தில் மஞ்சு வாரியருக்கு முக்கியமான கேரக்டர் அமைந்திருந்தது. அதை அவர் சிறப்பாக பயன்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அஜித் -மகிழ்திருமேனி கூட்டணி
முன்னதாக ஏகே62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், அவர் இந்த ப்ராஜெக்டிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து தடம், தடையறத் தாக்க போன்ற வெற்றி மற்றும் அதிரடிப் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் மகிழ்திருமேனி அஜித்தின் ஏகே62 படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்திற்கு பிடித்த ஸ்கிரிப்ட்கள்
லைகா தயாரிப்பில் அஜித் -மகிழ்திருமேனி கூட்டணி ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், விரைவில் படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்காக மகிழ்திருமேனி இரண்டு ஸ்கிரிப்ட்களை அஜித்திடம் விவரித்ததாகவும் இரண்டு கதைகளுமே அஜித்திற்கு பிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் ஏகே62 அறிவிப்பு
பேமிலி ஆக்ஷன் என்டர்டெயினர் மற்றும் ஸ்பை த்ரில்லர் என இரண்டு கதைகளை மகிழ்திருமேனி அஜித்திடம் விவரித்துள்ளார். விரைவில் இந்தக் கதைகளில் ஒன்றை அஜித் டிக் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டில் தன்னுடைய மனைவியுடன் சுற்றுலா சென்றுவிட்டு அஜித் நாடு திரும்பியுள்ளார். இதையடுத்து இன்னும் சில தினங்களில் ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











