Actor Ajith: அஜித்திற்கு பிடிக்கலைன்னா ரீ-சூட்டிங் எடுத்துதான் ஆகணும்.. மகிழ் திருமேனி ஓபன்!

சென்னை: அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் இன்றைய தினம் ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் துவங்கி நடந்து வருகிறது. இன்றைய தினம் படத்தில் அஜித்தின் இன்ட்ரோ சாங்கிற்கான சூட்டிங் துவங்கியுள்ளது, இதையடுத்து இந்த படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் வரும் ஏழாம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து குட் பேட் அக்லி படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் ஜப்பான் செல்ல உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இடையில் கேப் எடுத்துக்கொண்டு அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை அஜித்குமார் நிறைவு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விடாமுயற்சி படக்குழுவினர் விரைவில் அப்டேட் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Ajithkumar Vidaamuyarchi movie Magizh thirumeni tamil cinema

நடிகர் அஜித்குமார்: அஜித் குமார் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டிலேயே சூட்டிங் அறிவிக்கப்பட்டு துவங்கப்பட்ட விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்தப் படம் தீபாவளி ரிலீசாக வெளியாகும் என்று கூறப்பட்ட சூழலில் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்பட்டுள்ளது.இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவு செய்யப்பட்டு படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தாமதமான சூழலில் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் அஜித் இணைந்துள்ளார்.

குட் பேட் அக்லி படம்: குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் கடந்த மாதமே துவங்கப்பட்டு தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங் நடந்து வருகின்றன. இன்றைய தினம் இந்த படத்தில் அஜித்தின் இன்ட்ரோ பாடலுக்கான சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. இநத் பாடல் காட்சிக்கான சூட்டிங் வரும் 7ம் தேதி வரை நடக்கவுள்ளதாகவும் இதையடுத்து அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் ஜப்பான் புறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இடையில் இடைவெளி எடுத்துக்கொண்டு அடுத்ததாக மீண்டும் துவங்கவுள்ள விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் அஜித் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனி: இந்நிலையில் இந்த படம் குறித்து தனது பேட்டி ஒன்றில் பேசியுள்ள இயக்குநர் மகிழ் திருமேனி படத்தின் 90 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும் மீதமுள்ள 10 சதவிகித சூட்டிங், இம்மாதம் துவங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். படத்தில் சில காட்சிகள் அஜித்திற்கு திருப்தியை தரவில்லை என்றால் தான் அதை மீண்டும் ரீ-சூட் எடுத்து தான் ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் ஷூட்டிங்கின் ஒவ்வொரு காட்சிக்கும் அதிக காலத்தை மகிழ் திருமேனி எடுத்துக் கொள்வதாகவும் இதுவும் ஷூட்டிங் தாமதத்திற்கு காரணம் என்றும் கூறப்பட்டிருந்தது.

மகிழ் திருமேனி விளக்கம்: இதற்கு பதிலளிக்கும் வகையில் தான் தற்போது மகிழ் திருமேனி விளக்கம் அளித்துள்ளதாக தெரிகிறது. ஆக்சன் என்டர்டெயினராக உருவாகி வரும் விடாமுயற்சி படம் தொடர்ந்து சூட்டிங் தாமதமானாலும் படத்தின் அவுட்புட் சரியாக அமைந்து வருவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக தடம் உள்ளிட்ட படங்களை இயக்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள மகிழ் திருமேனி, இந்தப் படத்தில் அதை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். முன்னதாக மங்காத்தா உள்ளிட்ட படங்களில் திரிஷாவுடன் இணைந்து அஜித் நடித்துள்ள சூழலில் இந்த கூட்டணி மீண்டும் மேஜிக் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X