விடாமுயற்சி படத்துக்கு என்னை ஏன் செலக்ட் பண்ணீங்கன்னு அஜித்கிட்ட கேட்டேன்.. மகிழ் திருமேனி ஓபன்!
சென்னை: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் இரு மாத இடைவெளியிலேயே ரிலீசாக உள்ள நிலையில் முன்னதாக வரும் பிப்ரவரி 6ம் தேதி அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அஜித்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதனிடையே படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் விடாமுயற்சி, குட் பேட் அக்லி அடுத்தடுத்து ரிலீசாக உள்ளதையடுத்து அவரது ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளனர். குறிப்பாக விடாமுயற்சி படம் ரிலீசாவதில் அடுத்தடுத்த சிக்கல்களை சந்தித்து வந்த சூழலில் தற்போது இந்த படம் பிப்ரவரி 6ம் தேதி ரிலீசாக உள்ளது ரசிகர்களை மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்து ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் படத்தின் பாடல் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய உற்சாகத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
விடாமுயற்சி படம்: மேலும் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. இந்நிலையில் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி அதே உற்சாக மனநிலையுடன் படத்திற்கான பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார். அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் நடிகர் அஜித்தை இயக்குவது தன்னுடைய 15 ஆண்டுகால கனவு என்று அவர் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த கனவு தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். திடீரென அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் இருந்து தனக்கு கால் வந்ததாகவும் அதன் மூலமே இந்த படத்தின் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

விடாமுயற்சி பட வாய்ப்பு: உடனடியாக படத்தை துவங்க வேண்டும் என்று கூறியதால் தான் திரைக்கதையை உருவாக்க துவங்கியதாகவும், முதல் முறையாக தன்னுடைய சொந்த கதை இல்லாமல் தன்னை கவர்ந்த கதையை தான் உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, படத்தின் சூட்டிங்கின்போது அஜித்திடம் இந்த படத்திற்காக தன்னை இயக்குநராக ஏன் தேர்ந்தெடுத்தார் என்று கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு அஜித்தின் பதில் தன்னை மேலும் உற்சாகப்படுத்தியதாகவும் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். தாம் இருவரும் கம்போர்ட் ஜோனில் உள்ளதாகவும் அதிலிருந்து வெளியே வருவதற்கு இந்த படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அஜித் கூறியதாக மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.
அஜித் கேரக்டர் பெயர்: விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ் என முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் பெயரையும் அஜித்தே தேர்ந்தெடுத்ததாக மகிழ் திருமேனி கூறியுள்ளார். படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் அர்ஜுன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரோட் டிராவலை மையமாகக் கொண்டு திரில்லர் ஜானரில் விடாமுயற்சி படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதை வெளிப்படுத்தும் வகையில் படத்தின் அடுத்தடுத்த பகிர்வுகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அஜித் -திரிஷா கெமிஸ்ட்ரி: முன்னதாக வெளியான இந்த படத்தின் பாடல் ஒன்றில் அஜித் மற்றும் திரிஷாவின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். படத்தில் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி முன்னதாக பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நிலையில் இந்த படமும் சக்சஸ் லிஸ்டில் இணையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











