மீண்டும் அஜித்துடன் கூட்டணியா.. விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேனி சொன்னது என்ன?

சென்னை: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள நிலையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு சாமானிய மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் கதைக்களம் ஆலுமா டோலுமா ரேஞ்சுக்கு அஜித்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

விடாமுயற்சி படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் போதிலும் அஜித் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீசை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.. துணிவு படத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடாமுயற்சி படம் ரிலீசாகியுள்ள நிலையில் இன்றைய தினம் விடியற்காலை முதலே திரையரங்குகளில் அவர்கள் கொண்டாடியதை பார்க்க முடிந்தது.

ajithkumar vidaamuyarchi movie magizh thirumeni

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கொண்டாட செய்து வருகிறது. தமிழகத்தில் சிறப்பு காட்சியாக இந்த படம் ஒன்பது மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், அதிகாலை முதலே ரசிகர்கள் படத்தின் ரிலீசை திரையரங்குகளில் கொண்டாடினர். அஜித்துடன் திரிஷா ஜோடி சேர்ந்துள்ள விடாமுயற்சி படம் அவர்களின் மிகச் சிறப்பான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். படம் ஆவரேஜாக இருப்பதாகவும் ஒரு சிலர் தெரிவித்துள்ள நிலையில் அஜித்தை ஆலுமா டோலுமா பாணியில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் சற்று ஏமாற்றத்தையே கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ் காட்டிய அனிருத்: அர்ஜுன் மற்றும் ரெஜினா ஜோடியும் படத்தில் கலக்கல் பெர்பார்மன்ஸ் கொடுத்துள்ளது. ஆரவும் தன் பங்கிற்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளார். இதே போல ஒட்டுமொத்த படத்தையும் அஜித் தன்னுடைய தோள்களில் தாங்கியுள்ள நிலையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. துணிவு படத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பிறகு அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தில் கதைக்குத் தேவையான விஷயங்களை மட்டுமே மகிழ் திருமேனி கொடுத்துள்ளார் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

மகிழ் திருமேனி உற்சாகம்: இதனிடையே, இன்றைய தினம் செய்தியாளர்களிடம் உற்சாகமாக பேசிய மகிழ் திருமேனி, படத்திற்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்துவரும் தமிழக மக்களுக்கு தன்னுடைய நன்றியை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அஜித் இந்த படத்தை டப்பிங்கின்போது பார்த்ததாகவும் அவர் படம் குறித்து மிகப்பெரிய சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மங்காத்தா படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் அஜித் -அர்ஜுன் கூட்டணி இணைந்துள்ள நிலையில் அவர்களின் காம்பினேஷன் குறித்து ரசிகர்கள்தான் விமர்சிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மீண்டும் கூட்டணி?: விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித்துடன் மகிழ் திருமேனி மீண்டும் அடுத்த படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அது குறித்து பேசிய மகிழ் திருமேனி இது குறித்து நடிகர் அஜித் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். விடாமுயற்சி படத்தில் அலப்பறைகள் இல்லாத ஒரு சாமானிய மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினையை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. தன்னை சார்ந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஒரு சாமானிய மனிதன் எப்படி எதிர்கொள்வான் என்பதாக இந்த படத்தின் கதை உள்ள நிலையில் படத்தின் கதைக்களம் அஜித்திற்கு மிகவும் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் இந்த கூட்டணி இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X