Vidaamuyarchi: அதிரடி ஆக்ஷன் எல்லாம் வேண்டாம்.. மகிழ் திருமேனிக்கு ஷாக் கொடுத்த அஜித்!
சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இவர்கள் இருவரும் படத்தில் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இந்தப் பாடல்களில் அஜித் -திரிஷாவின் கெமிஸ்ட்ரி வெகு சிறப்பாக அமைந்துள்ளது. முன்னதாகவும் இந்த ஜோடி பல படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போதும் மாஸ் காட்டியுள்ளது. படம் சாமானிய மனிதனின் வாழ்க்கையை அவரது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளும் போராட்டமாக அமைந்துள்ளதாக மகிழ் திருமேனி தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் -மகிழ் திருமேனி காம்பினேஷனில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த துணிவு படம் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. சில மாதங்களிலேயே விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலும் படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படம் ரிலீசாவதிலும் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.
விடாமுயற்சி படம்: இதனிடையே கடந்த பொங்கலையொட்டி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பின்பு அதிலிருந்து படம் பின்வாங்கியது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 6ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் அடுத்தடுத்த பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. அதிகமான வியூஸ்களையும் பெற்று வருகின்றன. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்தடுத்த பேட்டிகளை பிரமோஷன்களாக கொடுத்து வருகிறார்.
ஆக்ஷன் காட்சிகள் இல்லை: அந்த வகையில் இந்த படத்தை பார்க்க எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கிற்கு வருமாறு ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் படத்தில் அஜித்திற்கு அதிகமான அதிரடி ஆக்சன் காட்சிகள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சில இடங்களில் மாஸ் காட்சிகளை இணைக்க தான் விரும்பியதாகவும் ஆனால் அஜித் படத்திற்கு தேவையானதை மட்டும் செய்யுங்கள் என்றும் அதிரடி ஆக்ஷன்களை அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் அஜித் தெரிவித்ததாக மகிழ் திருமேனி தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் படத்திற்கான ஜீவனை சிறப்பாக கொண்டு செல்லவும் அவர் அறிவுறுத்தியதாக மகிழ் மேலும் தெரிவித்துள்ளார்.
அஜித் கொடுத்த உறுதி: இந்தப் படத்திற்காக மகிழ் திருமேனி கொண்டாடப்படுவார் என்றும் அஜித் உறுதியளித்ததாகவும் மகிழ் திருமேனி தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் திரிஷா இணைந்துள்ளார். மேலும் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். ரோட் டிராவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எதிர்பார்ப்பு இல்லாமல் படத்தை பார்க்க வருமாறு மகிழ் திருமேனி கேட்டுக் கொண்டுள்ளது பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











