விஜய்யை குழப்பிய மகிழ் திருமேனி.. அவர் அப்படித்தான் கூப்பிடுவாராம்.. என்னல்லாம் நடந்துருக்கு!
சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. படம் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த பிரமோஷன்களில் இயக்குநர் ஈடுபட்டு வருகிறார். படத்தின் பல சுவாரஸ்யங்களை பகிர்ந்ததுடன் தன்னுடைய முந்தைய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் குறித்தும் பேசி வருகிறார்.
முன்னதாக நடிகர் அருண் விஜய்யுடன் கூட்டணி அமைத்து அடுத்தடுத்த வெறறிப் படங்களை கொடுத்துள்ள மகிழ் திருமேனி, விடாமுயற்சி படத்தின் கதைக்களத்தை ரோட் டிராவல் ஜானரில் கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் அனிருத் இசையமைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளன.

விடாமுயற்சி படம்: அஜித் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ளது விடாமுயற்சி படம். இந்தப்படத்தின் அதிகளவிலான சூட்டிங் அசர்பைஜானில் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் வரும் பிப்ரவரி 6ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் படம் ரோட் டிராவலை யைமாக கொண்டு உருவாகியுள்ளது. முன்னதாக அருண் விஜய்யை லீட் கேரக்டர்களில் வைத்து மகிழ் திருமேனி இயக்கிய படங்கள் மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்த நிலையில் விடாமுயற்சி படமும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
பிரமோஷன்களில் மகிழ் திருமேனி: விடாமுயற்சி படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் அஜித் தற்போது தன்னுடைய கார் ரேஸிங்கிற்காக துபாயில் உள்ளார். இந்நிலையில் அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை குவித்துவரும் நிலையில், படத்தின் சிறப்பான பிரமோஷனாக இந்த அறிவிப்பு காணப்படுகிறது. மேலும் துபாயில் நடந்த ரேஸிங்கில் அவரது அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்வுகளில் அஜித் தன்னுடைய படத்திற்கு மறைமுகமான பிரமோஷனை கொடுத்து வருகிறார்.
விஜய்யை குழப்பிய மகிழ் திருமேனி: லைகா நிறுவன தயாரிப்பாக இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பேசிவரும் மகிழ் திருமேனி, நடிகர் விஜய்யை பார்த்து தான் 3 கதைகளை சொன்ன கதையை கூறியுள்ளார். விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் தான் 3 கதைகளை சொன்னதாகவும் அதை மிகவும் சிறப்பாக கேட்டுக் கொண்ட விஜய், தன்னை பார்த்து மகிழ் சார் நீங்கள் என்னை மிகவும் குழப்பி விட்டீர்கள் என்று கூறியதாகவும் மகிழ் திருமேனி கூறியுள்ளார். விஜய் அனைவரையும் சார் என்று மரியாதையாகத்தான் பேசுவார் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மகிழ் திருமேனி வருத்தம்: இதையடுத்து மகிழ் கூறிய மூன்று கதைகளுமே விஜய்க்கு பிடித்து விட்டதாகவும் ஆனால் எந்தக் கதையை தான் தேர்வு செய்வது என்பது குறித்து குழப்பமாக உள்ளதாகவும் விஜய் தன்னிடம் கூறியதாகவும் மகிழ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து எந்தக் கதையை படமாக எடுக்கலாம் என்று தன்னிடமே விஜய் கேட்டதாகவும் மகிழ் திருமேனி தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். ஆனால் அவருடன் இணையும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்ற வருத்தத்தையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











