என்ன சொல்றீங்க.. ஏகே 62 படத்தில் அருண்விஜய் வில்லன் இல்லையா.. வில்லனாக களமிறங்கும் பிரபல ஹீரோ?

சென்னை : அஜித் 62 திரைப்படத்தில் அருண்விஜய் வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் ஜனவரி 12ந் தேதி வெளியானது. வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில், அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

இதில், மஞ்சு வாரியர்,சமுத்திரக்கனி, ஜான் கொக்கைன்,அமீர், பாவ்னி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் பல கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

அஜித்62

அஜித்62

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவனும் இதனை உறுதி செய்திருந்தார். ஏகே 62 என அழைக்கப்படும் இப்படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி வில்லனாகவும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், அஜித்துக்கும், தயாரிப்பு நிறுவனமானத்திற்கும் கதை பிடிக்காததால், விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.

இயக்குநர் மகிழ் திருமேனி

இயக்குநர் மகிழ் திருமேனி

தற்போது அஜீத் குமாரின் 'AK 62' படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அஜித் 62 படகுழுவினர் சென்னை புறநகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் முன் தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அருண் விஜய் வில்லனா?

அருண் விஜய் வில்லனா?

ஏகே 62 படத்தில் முக்கிய வில்லனாக அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தடையற தாக்க, தடம் ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் அருண்விஜய்யும், மகிழ் திருமேனியும் இணைந்துள்ளதால், இந்த காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆகும் என அருண்விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

'வணங்கான்' படத்தில்

'வணங்கான்' படத்தில்

ஆனால், அருண்விஜய், இயக்குனர் பாலாவின் 'வணங்கான்' படத்தில் சூர்யாவுக்கு பதில் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9 முதல் தொடங்க உள்ளது. படப்பிடிப்பு முடியும் வரை அருண்விஜய் தனது கெட்டப்பை மாற்ற முடியாது என்பதால், 'ஏகே 62' படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

வில்லனாக களமிறங்கும் ஹீரோ?

வில்லனாக களமிறங்கும் ஹீரோ?

இதனால், இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித் 62 படத்தில் ஆர்யாவை வில்லனாக நடிக்க வைக்க ஆலோசித்து வருவதாகவும், இருவரும் ஏற்கனவே 2014 இல் 'மீகாமன்' படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளதால், ஆர்யா நிச்சயம் ஓகே சொல்லுவார் என்று நம்பப்படுகிறது. மேலும் அருள்நிதியும் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏகே62 திரைப்படம் குறித்து உறுதியான அறிவிப்பு வெளியான அறிவிப்பு வெளியான பின் தான் உண்மை நிலவரம் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X