Ajithkumar: எது வேணும்னாலும் நடக்கலாம்.. விடாமுயற்சி இயக்குநருக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்!
சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கி முடித்துள்ளார் மகிழ் திருமேனி. இந்த படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் ப்ரோமோஷன்களுக்காக இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் அஜித் நடிப்பையும் ரேசிங்கையும் எப்படி சரியாக கொண்டு செல்கிறார் என்பது குறித்து அவர் வெளிப்படுத்தியுள்ளார். ரேசிங்கிற்கு முன்னதாக குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களின் கமிட்மெண்டை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அஜித் கூறியதாகவும் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார் பல வருடங்களாக தன்னை முன்னணி நடிகராக சினிமாவில் நிலை நிறுத்தி தொடர்ந்து சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். தன் மீது அன்பை செலுத்தும் ரசிகர்களுக்கு தன்னால் தர முடிந்த விஷயங்களையும் அவர் கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவ்வப்போது ரசிகர்களுக்கு பல ஆலோசனைகளையும் அவர் கொடுப்பதை பார்க்க முடிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேசிங்கில் அவர் பிஸியாக இருந்த நிலையிலும் தன்னுடைய ரசிகர்களை சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் தங்களது எதிர்காலத்திற்காக செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதை பார்க்க முடிந்தது.
இயக்குநர் மகிழ் திருமேனி: அடுத்ததாக அஜித் நடிப்பில் விடா முயற்சி மற்றும் குட்பேட் அக்லி படங்கள் ரிலீஸுக்கு தயாராகியுள்ளன. பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி படமும் ஏப்ரல் மாதத்தில் குட் பேட் அக்லி படமும் ரிலீசாகவுள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் காத்திருக்கின்றனர். விடாமுயற்சி படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் இயக்குநர் மகிழ் திருமேனி ஈடுபட்டு வருகிறார். லைகா நிறுவனத் தயாரிப்பாக உருவாக்கியுள்ள இந்த படம் ரோட் டிராவலை மையமாகக் கொண்டு கதைக்களத்தை அமைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அஜித் சொன்ன அதிர்ச்சியான விஷயம்: இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்களும் படத்தின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களின் அஜித்தை சிறப்பாக பார்க்க முடிகிறது. மேலும் அஜித் -திரிஷா -அர்ஜுன் உள்ளிட்டவர்களின் காம்பினேஷன் போஸ்டர்களையும் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்துள்ள மகிழ் திருமேனி, சூட்டிங்கின்போது அஜித் தன்னிடம் பேசிய விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். தான் ரேசிங்கில் பங்கேற்கும்போது எந்த நேரத்திலும் தனக்கு எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளதாக அஜித் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
100 சதவிகித முனைப்பு: அதனால் தான் ரேஸிங்கில் பங்கேற்பதற்கு முன்னதாக விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் கமிட்மெண்ட்டை நிறைவு செய்துவிட்டு செல்லவுள்ளதாக அஜித் கூறியதாக மகிழ்ந்திருமேனி பகிர்ந்துள்ளார். தன்னை நம்பி உள்ளவர்களுக்கு தான் செய்யும் சிறப்பான விஷயமாக அஜித் இதை தெரிவித்ததாகவும் மகிழ் திருமேனி குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் ரேசிங்கின் போது 100% முனைப்புடன் அதை செயல்படுத்த வேண்டும் என்று அஜித் கூறியதாகவும் அப்படியில்லாமல் தனக்கு இரண்டு படங்களின் கமிட்மெண்ட் இருப்பதாக நினைத்துக் கொண்டு 90% அந்த பணியை செய்தால் அது நியாயமாக இருக்காது என்று அஜித் கூறியதாகவும் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.
உணர்ச்சிவசப்பட்ட மகிழ் திருமேனி: அஜித் கூறியதற்கு ஏற்பவே விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்துவிட்டே ரேசிங்கில் பங்கேற்றதாகவும் அவர் கூறியதற்கு ஏற்ப அவருக்கு அங்கு நடந்த விபத்தையும் மகிழ் திருமேனி நினைவு கூர்ந்துள்ளார். இந்த சம்பவங்களை கோர்வையாக பார்க்கும்போது தான் உணர்ச்சிவசப்பட்டதாகவும் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். அஜித் தான் மேற்கொள்ளும் எந்த விஷயத்தையும் 100 சதவிகிதம் சிறப்பாக செய்ய முற்படுவார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











