தெறி வில்லன், பிரபல இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி: கவலைக்கிடம்
Recommended Video

சென்னை:பிரபல இயக்குநர் மகேந்திரன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜினியின் முள்ளும் மலரும் படம் மூலம் இயக்குநர் ஆனவர் மகேந்திரன். ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் காமராஜ் படம் மூலம் நடிகர் ஆனார். விஜய் நடித்த தெறி படத்தில் வில்லனாக வந்து அனைவரையும் மிரட்டினார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் கூட மகேந்திரன் நடித்திருந்தார். 79 வயதாகும் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவரின் உடல்நலம் குறித்த தகவல் வெளியாகி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. 1966ம் ஆண்டு முதல் திரையுலகில் உள்ள அவர் மீது பலரும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.
வயதானாலும் தொடர்ந்து கலைப்பணியை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











