twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Flashback : உதிரிப்பூக்கள்… உதிராத மாலையாய் என்றும் நம் உள்ளங்களில்!

    |

    Flashback : மகேந்திரன் இயக்கத்தில் உருவான உதிரிபூக்கள் திரைப்படத்தை பற்றித்தான் ப்ளாஷ்பேக் பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

    1979ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் விஜயன்,அஷ்வினி,சாருஹாசன், மதுமாலினி, குழந்தை நட்சத்திரமாக அஞ்சு ஆகியோர் லீட் ரோலில் நடித்திருந்தனர்.

    மற்றொரு சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேருகிறாரா நயன்தாரா ? மற்றொரு சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேருகிறாரா நயன்தாரா ?

    இப்படத்தில் இளையராஜாவின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்துள்ளது. இப்படத்திற்கு இசையமைத்தது மட்டுமல்ல, உதிரிப்பூக்கள் என்று படத்திற்கு பெயர் வைத்ததும் இளையராஜா தான்.

    எதார்த்தமான படம்

    எதார்த்தமான படம்

    தமிழ் சினிமாவில் அபூர்வமாய் பூத்த குறிச்சி பூ இந்த உதிரிப்பூக்கள் அன்றும் இன்றும் என்றும் இப்படத்தை மிஞ்ச ஒரு எதார்த்தமான திரைப்படம் இல்லை, இனியும் வரவ்போவதில்லை. தமிழர்கள் எல்லாம் பெருமைப்படும் அளவுக்கு உன்னதமான ஒரு படைப்புதான் இப்படம்.

    வில்லனாகவும் ஹீரோவாகவும்

    வில்லனாகவும் ஹீரோவாகவும்

    உதிரிப்பூக்கள்....புதுமைப்பித்தனின் சிற்றன்னை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். கிராமத்து பள்ளிக்கூடத்தில் மேனேஜராக பணியாற்றும் விஜயன். இந்த திரைப்படத்தில் வில்லனும் இவர் தான் ஹீரோவும் இவர், ஒவ்வொரு காட்சியும் இவரை மையப்படுத்தியே நகர்கிறது.

    உயிரோட்டம்

    உயிரோட்டம்

    விஜயனின் மனைவியாக அஸ்வினி. அவர் பேசிய வசனத்தை விட அவரின் கண் ஆயிரமாயிராம் வசனம் பேசி இருக்கும் . இந்த படத்தின் உயிரோட்டமே அவரின் மிதமிஞ்சாத நடிப்புதான். அஸ்வினியின் தங்கையாக மதுமாலினி, அப்பாவாக சாருஹாசன் நடித்தார்கள் என்பதைவிட வாழ்ந்தார்கள் என்று சொன்னால் பொறுத்தமாக இருக்கும்.

    மனதை வசீகரிக்கிறது

    மனதை வசீகரிக்கிறது

    அழகிய கண்ணே உறவுகள் நீயே...கண்ணதாசனின் பாடல் வரிகளில் இசைஞானியின் இசையோடு சேர்ந்து மனதை வசீகரிக்கிறது. ஒரு தாயின் மகிழ்ச்சியும், மனைவியின் துக்கமும் கலவையாக ஒலிக்கும் பாடலில் ஜானகி அம்மாவின் குரலில் இரண்டும் பின்னிப்பிணையும்.

    இன்றும் நம் உள்ளத்தில்

    இன்றும் நம் உள்ளத்தில்

    ஒட்டுமொத்த ஊரும் ஒன்று திரண்டு செய்த தவறுக்கு தண்டனையாக விஜயனை தற்கொலை செய்து கொல்ல சொல்வதும் இதுவரையில் எந்த படத்திலும் பார்திராத ஒரு க்ளைமாக்ஸ். என்னத்தான் தவறு செய்திருந்தாலும்... உயிரை விட வேணுமானு நினைக்கவச்சி, விஜயனை காப்பாற்ற செல்லும் அந்த 3 பேரும் வேறும் கதாபாத்திரம் அல்ல... அது தான் நாம்...உதிரிப்பூக்கள் உதிராத மாலையாக என்றும் நம் உள்ளங்களில்...

    English summary
    Director Mahendran’s Uthiri Pookal Flashback
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X