13 Years of Raavanan: 'ராவணன்'னுக்கு வயசு 13.. மணிரத்னத்தின் ஹிட் ஃபார்முலா மேஜிக்!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்த ராவணன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 13 ஆண்டுகள் ஆகிறது. இதனை இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநரான மணிரத்னம், இந்தியா முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களையும் திரைத்துறை பிரபலங்களையும் கவர்ந்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர்.
90 காலகட்டத்தில் அவருடைய இயக்கத்தில் வெளியான அரவிந்த் சாமி நடித்த ரோஜா, பம்பாய் உள்ளிட்ட திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தன.

ராவணன்: கிளாசிக் ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த மணிரத்னம், ராமாயணத்தை அடிப்படையாக வைத்து ராவணன் என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழில் ராவணன் என்றும் இந்தியில் ராவண் என்று வெளியானது. தமிழில், ராவணனாக நடித்த விக்ரம், இந்தியில் ராவணனை வேட்டையாடும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.
அட்டகாசமான நடிப்பு: ஒரே கதையைக் கொண்டு உருவான இருமொழி படத்தில் ஒரே நடிகர் நேர் எதிர் கதாபாத்திரத்தில் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். தமிழ் மற்றும் இந்தி என இரண்டு கதாபாத்திரத்திலும் விக்ரம் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதில் தீயவர்களாக சித்தரிக்கப்பட்டவர்களின் நியாயங்களையும் நல்லவர்களாக சித்தரிக்கப்பட்டவர்களின் மறு பக்கத்தையும் முன்வைத்து எடுக்கப்பட்டதால் படம் வெளியான போது பலவிதமான சர்ச்சையை ஏற்படுத்தியது.

உசுரே போகுதே: இப்படத்திற்கு சுஹாசினி மணிரத்னம் வசன கர்த்தாவாக இருந்தார்.மேலும், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் பிரம்மாண்ட அருவிகளும் மலை முகடுகளும் இருள் சூழ்ந்த காடு, நீரோடை என ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி செதுக்கி எடுத்திருப்பார். ஏஆர் ரஹ்மானின் இசையில்'உசுரே போகுதே, கோடு போட்டா, காட்டுச்சிறுக்கி பாடல் படம் வெளியாவதற்கு முன்பே பட்டையை கிளப்பின.
13 Years of Raavanan: தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியான இந்த படம் வசூலை வாரிக்குவித்தது. இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 13ஆண்டுகள் ஆனபோதும், இந்த படத்தின் மீதான ஆர்வம் சற்றும் குறையவில்லை. யூடியூபில் தற்போது வரை ராவணன் படத்தையும் அந்த படத்தில் வரும் பாடலையும் தேடி தேடி பார்த்து ரசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











