நான் உங்களோட பெரிய ரசிகன்.. சீக்கிரமே இணைந்து படம் பண்ணலாம்.. அமரன் ஆடியோ ரிலீசில் பேசிய மணிரத்னம்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அமரன் படம் தீபாவளி ரிலீசாக வரும் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வரும் நிலையில் இன்றைய தினம் படத்தின் இசை வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.
இதில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மணிரத்னமும் பங்கேற்று படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி உள்ளிட்ட பக்குழுவினருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளது. இந்த படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்தின் அதிகபட்ச சூட்டிங் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது.
அமரன் ஆடியோ ரிலீஸ்: காஷ்மீரின் பனிப்படர்ந்த இடங்களில் இந்த படத்தின் சூட்டிங்கை மிகவும் சிரமங்களுக்கிடையில் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாக நடித்துள்ள நிலையில் அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்த நிலையில் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
சிறப்பு விருந்தினர் மணிரத்னம்: இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மணிரத்னம் தனித்தனியாக இயக்குனர், படத்தின் தயாரிப்பு நிறுவனமான RKFI, நாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் ஹீரோயின் சாய் பல்லவி உள்ளிட்டவர்களை குறிப்பிட்டு பேசினார். ரியல் லைஃப் படங்களுக்கு கூடுதல் மதிப்பு காணப்படும் என்றும் அந்த வகையில் உருவாகியுள்ள அமரன் படத்தின் ரிலீசுக்காக தான் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இந்தப் படத்தை சாத்தியப்படுத்திய ராஜ்குமார் பெரியசாமிக்கும் மணிரத்னம் தனது பாராட்டுக்களை பகிர்ந்துள்ளார்.
நான் உங்களின் பெரிய ரசிகன்: புதிய நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து தங்களை உயர்த்திக் கொண்டு, ஆக்ஷன் ஹீரோக்களாக உருமாறுவார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் படிப்படியாக தன்னுடைய knowledgeஜை உயர்த்திக் கொண்டு தற்போது ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுததுள்ளதாகவும் மணிரத்னம் பாராட்டு தெரிவித்துள்ளார். அவருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் உள்ள நிலையில் இந்தப் படத்தின் புதிய Zoneல் அவர் காட்சியளிப்பதாகவும் மணிரத்னம் தொடர்ந்து பாராட்டினார். இதையடுத்து பேசிய இயக்குநர் மணிரத்னம், இந்தப் படத்தில் நடித்துள்ள சாய் பல்லவிக்கு தான் ரசிகன் என்றும் விரைவில் அவருடன் இணைந்து செயல்பட தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











