கலைப்படைப்புகளின் பிதாமகன்... காதலை வித்தியாச கோணத்தில் கொடுத்தவர்
சென்னை : கலைப்படைப்புகளின் பிதாமகனாக திகழ்பவர் இயக்குநர் மணிரத்னம்.
அவர் தனது 65வது பிறந்ததினத்தை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.
இதையொட்டி அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

சிறப்பான அடையாளம்
இயக்குநர் மணிரத்னம் சிறப்பான படங்களை கொடுத்துள்ளவர். ஒவ்வொரு படத்தையும் கலைப்படைப்பாக்கியவர். வசனங்களை சுருக்கி உடல்மொழியாலேயே நடிகர்களை பேச வைத்தவர். கன்னடத்தில் தன்னுடைய கேரியரை துவக்கிய அவர் தொடர்ந்து தென்னிந்திய மொழி படங்களில் மட்டுமின்றி ஹிந்தியிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.

சுருக்கிய வசனங்கள்
இவரது முதல் படம் பல்லவி அனுபல்லவி இவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக தன்னுடைய படங்களை பேச வைத்தார். இவருக்கென்று இவரது சுருக்கப்பட்ட வசனங்களுக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.

காதலை முன்னெடுத்து சென்றவர்
இவரது மௌனராகம், ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்கள் காதலையும், தீவிரவாதத்தையும் முன்னெடுத்து சென்ற படங்கள். இருவர் படம் இருவேறு சகாப்தங்களை முன்னிலைப்படுத்தி எடுப்பப்பட்ட படம். அந்த படங்களுக்கான நியாயத்தை சிறப்பான வகையில் செய்திருந்தார் மணிரத்னம்.

வரலாற்று பின்னணி
தற்போது பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து வருகிறார். வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்பட்டு வரும் இந்த படம் மிகவும் பிரமாண்டமான அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய 65வது பிறந்ததினத்தை மணிரத்னம் கொண்டாடி வருகிறார்.

குவியும் வாழ்த்துக்கள்
இதையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நடிகர் சரத்குமாரும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கின் கிராண்ட் மாஸ்டர் மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் கடவுளின் அனுக்கிரகம் அவருக்கு அமையட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











