twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இணையத்தில் லீக்கானதா பொன்னியின் செல்வன்..படத்தை வைத்து ஆன்லைன் மோசடி!

    |

    சென்னை : பொன்னியின் செல்வன் படத்தை பயன்படுத்தி ஆன்லைனில் மெகா மோசடி ஒன்று நடந்துள்ளது.

    பிற்கால சோழர்களின் வரலாற்றை மையமாக வைத்து எழுத்தாளர் கல்கி உருவாக்கிய புதினம் பொன்னியின் செல்வன்.

    இந்த நாவலை படித்தவர்கள் ஆழ்வார்க்கடியார் நம்பி, நந்தினி, வந்தியத் தேவன் என அத்தனை கதா பாத்திரங்களுடனும் ஒன்றிப் போய்விடுவார்கள். இன்றளவும் தமிழ் வாசிப்பாளர்களுக்கு வாசிப்புச் சூழலில் பொன்னியின் செல்வன் மகத்தான நூலாக உள்ளது.

    ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 விரைவில் வரும்.. எனக்கு பதிலாக அதில் தனுஷ் நடிப்பார்.. பார்த்திபன் பகிர்வு! ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 விரைவில் வரும்.. எனக்கு பதிலாக அதில் தனுஷ் நடிப்பார்.. பார்த்திபன் பகிர்வு!

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. எம்ஜிஆர் முதல் கமல், ரஜினி வரை நடிக்க ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தை தற்போது மணிரத்னம் இயக்கி வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார்.

    எம்ஜிஆரே ஆசைப்பட்ட படம்

    எம்ஜிஆரே ஆசைப்பட்ட படம்

    பொன்னியின் செல்வன் படத்தை எம்ஜிஆரே எடுக்க ஆசைப்பட்ட படமாகும். ஆனால் பல காரணங்களால் படம் எடுக்க முடியாமல் போனது. ஆனால் முக்கால் நூற்றாண்டுக்கு பின் மணிரத்தினத்தால் அது சாத்தியமாகியுள்ளது. படத்தின் டிரைலர் ப்ரோமோஷன்,டீசர், பாடல் என அனைத்தும் மக்களுக்கு பெரியவிருந்தாக அமைந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகுறவைத்துள்ளது. வரலாற்று சரித்திர புகழ் பெற்ற இத்திரைப்படம் இன்று வெளியாகி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

    அற்புதமான படைப்பு

    அற்புதமான படைப்பு

    ரவி வர்மனின் கேமராவில் ஒவ்வொரு காட்சியும் அழகும் புத்துயிரும் பெறுகிறது. தோட்டா தரணியின் அற்புதமான கலை, ஏகா லக்கானியின் ஆடை வடிவமைப்பு என படத்தை ரசிகர்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வர்ணித்து புகழ்ந்து வருகின்றனர்.

    ஆன்லைன் மோசடி

    ஆன்லைன் மோசடி

    இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை பயன்படுத்தி ஆன்லைனில் மோசடி ஒன்று நடந்துள்ளது. அதில் பொன்னியின் செல்வன் படம் டெலிகிராமில் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாக, படத்தின் பார்க்க ஆர்வமாக இருந்த ரசிகர்கள் டெலிகிராமில் குவிந்தனர். ஆனால், அந்த டெலிகிராம் லிங்கை க்ளிக் செய்துள்ளனர். ரூ 45 தொகையை கட்டணமாகச் செலுத்தினால் படத்தை டவுன்லோடு செய்து பார்த்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.

    ஏமாந்த ரசிகர்கள்

    ஏமாந்த ரசிகர்கள்

    இதையடுத்து, பலரும் ஆன்லைன் வழியாக பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் பணத்தை செலுத்திய பல மணி நேரமாகியும் படம் வராமல் லோடிங் லோடிங் என்று வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகுதான், லோடிங் மட்டும் தான் வரும் படம் வராது என்பதை புரிந்து கொண்டு இணையத்தில் புலம்பி வருகின்றனர்.

    English summary
    director Mani Ratnam's ponniyin selvan online scam
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X