பொன்னியின் செல்வன் படத்தில் இத்தனை பாடல்களா? வெளியான ருசிகரத் தகவல் !

சென்னை : பொன்னியின் செல்வன் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தில் இரண்டு பாகங்களையும் சேர்த்துமொத்தம் பன்னிரண்டு பாடல்கள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், யார் யார் எத்தனை பாடல்களை எழுதியுள்ளார்கள் என்ற விவரமும் தற்போது கசிந்துள்ளது.

கல்கியின் பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன்

அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். இந்த புதினத்தை படிக்கும் போது ஒவ்வொரு காட்சியும் கண் முன்தோன்றி மறையும். ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிராயணம் செய்து கொண்டிருந்தான்... என அந்த காட்சியையும் அந்த வீர நாராயண ஏரியின் காட்சியை முன் தோன்ற வைத்து உள்ளத்தை வசீகரிக்கும் இதுதான் இந்த புதினத்தின் சிறப்பு.

எம்.ஜி.ஆரின் ஆசை

எம்.ஜி.ஆரின் ஆசை

கல்கி எழுதிய பொன்னியின் வர்ணனைகளையும் கண்டு வியந்த எம்.ஜி.ஆர் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க எண்ணினார். இதற்காக கல்கியின் குடும்பத்தினரிடம் முறையாக அனுமதியும் பெற்றார். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பொன்னியின் செல்வன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டது. இதற்காக சிவாஜிகணேசன், ஜெமினகணேசன், சிவக்குமார், நம்பியார், பத்மினி, சாவித்ரி போன்ற நடிகைளையும் அவர் தேர்வு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

படமாக்க முடியவில்லை

படமாக்க முடியவில்லை

பொன்னியின் செல்வன் படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் இரண்டு கதாபாத்திரத்தில் அதாவது இரட்டை வேடத்தில் நடிக்க திட்டமிட்டு இருந்தார். ஒன்று வந்தியத்தேவன் மற்றொன்று ஆதித்தகரிகாலன். ஆனார், எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு விபத்தில் சிக்கினார். இதனால், அவர் நடிக்க வேண்டிய படங்கள் அனைத்தும் அப்போது படமாக்க முடியாமல் அவருக்காக காத்திருந்தன. உடல்நிலை தேறி வந்ததும். கையில் வைத்திருந்த படங்களில் பிஸியாக நடிக்கத் தொடங்கினார் எம்ஜிஆர். இதனால் அப்படம் கிடப்பில் போடப்பட்டது. இறுதி வரை எம்ஜி.ஆரின் நிறைவேறாத ஆசையாகிப் போனது பொன்னியின் செல்வன்.

மணிரத்னத்தின் கனவுபடம்

மணிரத்னத்தின் கனவுபடம்

இதேபோல உலகநாயகன் கமல்ஹாசனும் இத்திரைப்படத்தை படமாக எடுக்க முயற்சிகளை செய்தார் . ஆனால் அந்த முயற்சியும் கை கூடவில்லை. இப்படி பலரின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனை இயக்குனர் மணிரத்னம் இயக்கி வருகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

ஏராளமான நட்சத்திரம்

ஏராளமான நட்சத்திரம்

இப்படத்தில் சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ்,பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஷ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கதாபாத்திரம் அறிவிப்பு

கதாபாத்திரம் அறிவிப்பு

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயரம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ் , வந்தியத் தேவனாக கார்த்தி,

குந்தவையாக த்ரிஷா

குந்தவையாக த்ரிஷா

குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம் ஒரு எதிர்மறையான கதாபாத்திரமாகும். மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவெட்டார் மற்றும் பார்திபன் சின்ன பழுவெட்டார் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். சிவனடியார்களை அடியாள் அடிக்கும் வைணவ சாமியார் வேடத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்க உள்ளார். மேலும் விக்ரம் பிரபு கந்தன் மாறன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

12 பாடல்கள்

12 பாடல்கள்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தில் மொத்தம் 12 பாடல் இருப்பதாகவும், இதில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எட்டு பாடல்களை எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், கவிஞர் கபிலன் இரண்டு பாடல்களையும், வெண்பல கீதையன் ஒரு பாடலையும், வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து ஒரு பாடலையும் எழுதியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஏ.ஆர். ரஹ்மான் இசை

ஏ.ஆர். ரஹ்மான் இசை

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Recommended Video

எனது 15 வருட சினிமா போராட்டம் | Director Sarjun KM exclusive | Filmibeat Tamil
ஹைதராபாத்தில் படப்பிடிப்பு

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முதலில் தாய்லாந்தில் தான் தொடங்கப்பட்டது. பின்னர், கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த படப்பிடிப்பு, நிலைமை சீராகி பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இதில், நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு நடித்தார். அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது அங்கு படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஹைதராபாத் சென்றுள்ளது. அங்கு ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X