பொன்னியின் செல்வன் படத்தில் மம்முட்டியும் இருக்காரா.. மணிரத்னம் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்!

திருவனந்தபுரம் : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன் திரைக்காவியம்.

இந்தப் படத்திற்கு மிகச்சிறந்த எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், தற்போது படக்குழு பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ளது.

தற்போது கேரளாவில் இருக்கும் இந்த டீம் இன்று பெங்களூரு செல்லவுள்ளது. நாளைய தினம் பெங்களூருவில் நடைபெறும் பிரமோஷனில் பங்கேற்கவுள்ளது.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் தமிழில் மிகச்சிறந்த பிரம்மாண்ட படைப்பாக வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன். இந்தப் படத்தை இயக்கியுள்ள மணிரத்னம், லைகாவுடன் இணைந்து படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனமாக செய்து வருகிறார்.

சிறப்பான கேரக்டர் தேர்வு

சிறப்பான கேரக்டர் தேர்வு

மணிரத்னம் தனது படங்களில் சிறப்பான கேரக்டர் தேர்வை எப்போதுமே மேற்கொள்வார். அது இந்த வரலாற்று படத்திலும் தொடர்ந்துள்ளது. படத்தின் அனைத்து கேரக்டர்களும் அந்த வரலாற்று நாயகர்களையும் நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி படத்தை 155 நாட்களில் முடித்துள்ளார் மணிரத்னம்.

 திட்டு வாங்கிய ஜெயம் ரவி

திட்டு வாங்கிய ஜெயம் ரவி

படத்தில் அருண்மொழியாக நடித்துள்ள ஜெயம் ரவி, சமீபத்தில் தான் மணிரத்னத்திடம் திட்டு வாங்கிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். தான் சூட்டிங்கின் ஒரு காட்சியில் தலை தாழ்த்தி நடித்தபோது அருண்மொழி எந்த காலத்திலும் தலை தாழ்த்த மாட்டான், நிமிர்ந்து நட என்று அவர் தன்னை திட்டியதாக ஜெயம் ரவி பகிர்ந்திருந்தார்.

பிரம்மாண்டமான வெளியீடுகள்

பிரம்மாண்டமான வெளியீடுகள்

இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர், இசை என அனைத்தும் பிரம்மாண்டமாக வெளியான நிலையில், தற்போது படக்குழுவினர் பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் துவங்கிய இந்த சோழர்களின் பயணம் தற்போது கேரளாவில் நிலை கொண்டுள்ளது. அடுத்தடுத்து பெங்களூரு, டெல்லி, துபாய் என நீளவுள்ளது.

கேரளாவில் பிரமோஷன்கள்

கேரளாவில் பிரமோஷன்கள்

இதனிடையே நேற்றைய தினம் கேரளாவில் மிகவும் பிரம்மாண்டமான பிரமோஷனில் படக்குழு ஈடுபட்டனர். இதில் பேசிய மணிரத்னம் இந்தப் படத்தில் மம்முட்டி மற்றும் பிரித்விராஜும் இணைந்துள்ளது குறித்து வெளிப்படுத்தினார். இதைக் கேட்ட கேரள ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.

பொன்னியின் செல்வனில் மம்முட்டி

பொன்னியின் செல்வனில் மம்முட்டி

இந்தப் படம் மம்முட்டியின் வாய்ஸ் ஓவரில்தான் துவங்குகிறது என்று மணிரத்னம் தெரிவித்துள்ளார். இதற்காக தான் மம்முட்டியிடம் கேட்டபொழுது உடனடியாக அவர் ஓகே சொன்னதாகவும் அதேபோல மலையாள நடிகர் பிரித்வி இந்தப் படத்திற்கான ட்ரெயிலரில் பேசியுள்ளதாகவும் கூறிய மணிரத்னம் அவர்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மலையாள நடிகர்கள்

மலையாள நடிகர்கள்

மேலும் இந்தப் படத்தில் மலையாள நடிகர்கள் ஜெயராம், ரஹ்மான், லால், ரியாஸ் கான், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பாபு ஆன்டணி உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். நேற்றைய தினம் மலையாள ரசிகர்கள் முன்பு பேசிய பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு மிகவும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X