ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல்… நவரசத்தை கொடுத்ததற்கு நன்றி கூறிய மணிரத்னம் !
சென்னை : திரைத்தொழிலாளர்களின் நலனுக்காக, தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய நவரசா சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதில், ஒரு ரூபாய் கூட சம்பளம் இல்லாமல் நேரத்தையும் உழைப்பையும் கொடுத்து நவசரத்தை உருவாக்கிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மணிரத்னம் நன்றி கூறியுள்ளார்.
உங்களுடைய இந்த பேராதரவால் தான் ஆறுமாதங்களுக்கு நம் திரைத்துறையைச் சார்ந்த 12,000 குடும்பத்தினரின் வீட்டு தேவைகளுக்கு நம்மால் உதவ முடிந்தது என்று கூறியுள்ளார்.

9 குறும்படங்கள்
இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக்நரேன், வசந்த் சாய்,கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன்பிரசாத் என 9 இயக்குனர்களும் 9 குறும்படங்களை இயக்கி உள்ளனர்.

9 குணாதிசயங்கள்
கோபம், சிரிப்பு, காதல், வியப்பு, வெறுப்பு, ஆச்சர்யம், அழுகை போன்ற 9 உணர்வுகளை அடிப்படையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டது. இதில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்த்சாமி, சித்தார்த், அதர்வா, பாபி சிம்ஹா, ரேவதி, ரோகினி, அதிதி பாலன், ரித்விகா, யோபி பாபு என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

எதிரி
விஜய்சேதுபதி நடித்துள்ள எதிரி என்ற குறும்படத்தில், ரேவதி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இக்குறும்படத்தை பெஜோய் நம்பியார் இயக்கி உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு மதன்கார்க்கி பாடலை எழுதி இருந்தார்.

சம்மர் ஆஃப்
குணாதிசயங்களில் நகைச்சுவையை மையமாக கொண்ட சம்மர் ஆஃப் 92வில், யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ப்ரியதர்ஷன் இயக்கி இருந்தார்.

ப்ராஜக்ட் அக்னி
ப்ராஜக்ட் அக்னி என்ற குறும்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். அரவிந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா இதில் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இப்படத்தை முழுநீள திரைப்படமாக்கும் முயற்சியில் இயக்குனர் ஈடுபட்டுள்ளார்.

பாயாசம்
அருவி திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அதிதி பாலன் பாயாசம் என்ற பிரிவில் நடித்துள்ளார். இதில் டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன். செல்ஃபி கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.

அமைதி
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய அமைதியில் பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண் ஆகியோர் நடித்துள்ளனர். இது நவரசத்தில் அமைதியை குறிக்கும் படமாக அமைந்தது.

ரௌத்திரம்
ரௌத்திரம் குறும்படத்தை இயக்கி நடிகர் அரவிந்த் சாமி இயக்குனராகி உள்ளார் இத்திரைப்படத்தில் ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக் , கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இன்மை
நவரசா குறும்படத்தில் இன்மை என்ற குறும்படத்தில் சித்தார்த் நடித்திருந்தார். இக்குறும்படத்தை ரவீந்திரன் பிரசாத் இயக்கி உள்ளார். பயத்தை உணர்த்தும் இன்மை என்ற குறும்படம் மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் குறும்படமாக இருந்தது.

கிடார் கம்பியின் மேலே நின்று
காதல் கதைகளை கவிதையுடன் கூறுவதில் வல்லவரான கௌதம் வாசுதேவ் மேனன், நவரசா பகுதியில் கிடார் கம்பியின் மேலே நின்று என்ற காதல் கதையை உருவாக்கி உள்ளார். இதில், சூர்யா ப்ரயா ரோஸ் மார்டன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

துணிந்த பின்
தைரியத்தை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் துணிந்த பின், இப்படத்தில் அதர்வா, அஞ்சலி கிஷார் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை சர்ஜூன் இயக்கினார்.

அனைவருக்கும் நன்றி
இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி அனைவரும் ஒன்றிணைந்து ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல், நேரத்தையும் உழைப்பையும் கொடுத்து நவரசத்தை உருவாக்கிய இயக்குனர்கள் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி

மகிழ்ச்சியில் இருக்கிறோம்
உங்களுடைய இந்த பேராதரவால், ஆறுமாதங்களுக்கு நம் திரைத்துறையைச் சார்ந்த 12,000 குடும்பத்தினரின் வீட்டு தேவைகளுக்கு நம்மால் உதவ முடிந்தது. உதவி என்பதைத் தாண்டி நம் கலை குடும்பத்தினருக்கு நம் அன்பை அக்கறையை நன்றியை உணர்த்த முடிந்தது. பெருமையில் நன்றி உணர்ச்சியில் மகிழ்ச்சியின் உச்சத்தில் நிற்கிறோம் நாங்களும், நீங்களும் தானே? நீங்கள் இல்லாமல் இந்த மகிழ்ச்சி இல்லை. மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்கிறோம் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











