காக்கா முட்டை மணிகண்டனின் கடைசி விவசாயி... ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுருக்கு...

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடைசி விவசாயி.

காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டனின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மணிகண்டன்

இயக்குநர் மணிகண்டன்

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கடைசி விவசாயி. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர்.

முக்கியமான கேரக்டரில் முதியவர்

முக்கியமான கேரக்டரில் முதியவர்

ஆனால் படத்தில் நல்லாண்டி என்ற முதியவரே லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.

பிப்ரவரி 11ல் ரிலீஸ்

பிப்ரவரி 11ல் ரிலீஸ்

இடையில் நேரடியாக ஓடிடியில் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சோனி லைவ் இந்தப் படத்தை வாங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வரும் பிப்ரவரி 11ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தை மணிகண்டனே தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசை

சந்தோஷ் நாராயணன் இசை

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். காக்கா முட்டை போன்று இந்தப் படமும் மணிகண்டனுக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயத்திற்கு முக்கியத்துவம்

விவசாயத்திற்கு முக்கியத்துவம்

விவசாயிகளை முதன்மை படுத்தியும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் இந்தப் படம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான கெட்டப்

வித்தியாசமான கெட்டப்

இந்தப் படத்தின் போஸ்டர்கள் முன்னதாக வெளியான நிலையில் இதில் வித்தியாசமான கெட்டப்பில் விஜய் சேதுபதி காணப்படுகிறார். தன்னுடைய கேரக்டருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அவர் அதையே இந்தப் படத்திலும் தொடர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X