“பொன்னியின் செல்வன்“ நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த முழு லிஸ்ட் !

சென்னை : பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

லைகா நிறுவனம் வழங்க மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

கல்கியின் பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன்

1899ம் ஆண்டு அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். இந்த புதினம், கல்கி வார இதழில் தொடர்கதையாக 1950 முதல் 1955வரை வெளிவந்தது. இப்புதினத்திற்கு கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாக பல்வேறு காலகட்டஙகளில் கல்கி இதழில் தொடராக வெளியிட்டது.

எம்.ஜி.ஆர் படமாக்க விரும்பினார்

எம்.ஜி.ஆர் படமாக்க விரும்பினார்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் உரைநடை வீச்சும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளும் அதன் வர்ணனைகளையும் கண்டு வியந்த எம்.ஜி.ஆர் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க எண்ணினார். இதற்காக கல்கியின் குடும்பத்தினரிடம் முறையாக அனுமதியும் பெற்றார். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பொன்னியின் செல்வன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டது. இதற்காக நடிகர் நடிகையர் தேர்வு செய்யும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தயாரிப்பில் ஈடுபடமுடிவில்லை

தயாரிப்பில் ஈடுபடமுடிவில்லை

பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க சில வருடங்கள் தேவைப்படும் என்ற நிலையில்,பல படங்களை கையில் வைத்து கொண்டு பிஸியாக நடித்த எம்ஜிஆரால் படத் தயாரிப்பில் ஈடுபடமுடிவில்லை. பொது நிகழ்ச்சியில் பேசும் போது கூட பொன்னியின் செல்வன் படமா எடுக்க நான் முயற்சித்த போது, சோழ இளவரசனாக சிவக்குமாரை நடிக்க வைக்க ஆசை பட்டேன் என்று பல நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். எம்ஜி.ஆரின் நிறைவேறாத ஆசையாகிப் போனது பொன்னியின் செல்வன்.

கனவை நினைவாக்கினார்

கனவை நினைவாக்கினார்

இதேபோல உலகநாயகன் கமல்ஹாசனும் இத்திரைப்படத்தை படமாக எடுக்க முயற்சிகளை செய்தார் . ஆனால் அந்த முயற்சியும் கை கூடவில்லை. இப்படி பலரின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனை இயக்குனர் மணிரத்னம் இயக்கி வருகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

ஏராளமான நட்சத்திரம்

ஏராளமான நட்சத்திரம்

இப்படத்தில் சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ்,பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஸ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கதாபாத்திரம் அறிவிப்பு

கதாபாத்திரம் அறிவிப்பு

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயரம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ் , வந்தியத் தேவனாக கார்த்தி,

குந்தவையாக த்ரிஷா

குந்தவையாக த்ரிஷா

குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம் ஒரு எதிர்மறையான கதாபாத்திரமாகும். மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்திபன் சின்ன வேட்டரையராகவும் நடிக்க உள்ளனர்.

இணையத்தில் வைரல்

இணையத்தில் வைரல்

சிவனடியார்களை அடியாள் அடிக்கும் வைணவ சாமியார் வேடத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்க உள்ளார். மேலும் விக்ரம் பிரபு கந்தன் மாறன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த படப்பிடிப்பு, நிலைமை சீராகி பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இதில், நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு நடித்தார். அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது அங்கு படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஹைதராபாத் சென்றுள்ளது. அங்கு ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசை

ஏ.ஆர். ரஹ்மான் இசை

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X