மணிரத்னத்தின் உதவியாளர் இயக்கும் வானம் கொட்டட்டும்:20 வருடங்களுக்கு பிறகு இணையும் ராதிகா-சரத்குமார்!
சென்னை: மணிரத்னத்தின் உதவியாளர் தனசேகரன் வானம் கொட்டட்டும் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மணிரத்னத்தின் உதவியாளர் தனசேகரன் இயக்கும் வானம் கொட்டட்டும் படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாய் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சாந்தனு - ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரம் பிரபு - மடோனா செபஸ்டியன், சரத்குமார் - ராதிகா சரத்குமார் என 3 காதல் கதைகள்.

ராயப்பேட்டையில் உள்ள ஹுசைன் அலி கான் வீதியின் உட்புறத்தில் உள்ள குறுகிய பாதைகளில் ஒரே சலசலப்பு. ஏனெனில் படக் குழுவினர் வானம் கொட்டட்டும் படப்பிடிப்பில் இயக்குனர் தன சேகரன் பிஸியாக இருக்க, ஒளிப்பதிவாளர் ப்ரீத்தி ஜெயராமன் உதவி இயக்குநர்கள் மற்றும் யூனிட்டில் உள்ள மற்றவர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தார். யூனிட்டிலிருந்து சில மீட்டர் தொலைவில் இருந்த சாந்தனு தனது பைக்கை ஓட்டத் தொடங்கினார், ஐஸ்வர்யா ராஜேஷ் அதில் சவாரி செய்தார். இருவரும் இணையும் முதல் படம் இது. ஐஸ்வர்யா மற்றும் சாந்தனுவின் அறிமுக காட்சியும் இதுதானாம்.

இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார் அச்சகத்தில் பணிபுரிகிறார். அவரது கணவராக சரத்குமார். சூர்யவம்சம் படத்திற்கு பிறகு 20 வருடங்களுக்கு பின் கணவன், மனைவியாக இருவரும் இணைந்து நடிக்கின்றனர். விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்களின் பிள்ளைகளாக வருகின்றனர்.

ஏறக்குறைய 80 சதவிகித படப்பிடிப்பு முடித்த நிலையில் , விரைவில் திருநெல்வேலி மற்றும் குற்றாலம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது."வானம் கோட்டட்டும் என்ற தலைப்பு மணி ரத்னத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது அவரே படக் கதையும் இணைந்து எழுதியுள்ளார். இந்த தலைப்பு அவரது ஓகே கண்மணி மற்றும் காற்று வெளியிடை ஆகிய படங்களுக்கு கருதப்பட்டாலும், இந்த கதைக்கு மட்டுமே பொருந்தி வைத்துள்ளனர்.

மடோனா செபஸ்டியன் இப் படத்தில் வசதியான பெண்ணாக நடிக்கிறார். அவரது ஜோடி விக்ரம் பிரபு. இப்படத்திற்கு மற்றுமொரு சிறப்பு மழைக்காட்சிகளில் நிழமாகவே மழை பெய்ததாம். இதற்கு முன்பும் இதே போன்று நாட்டாமை படத்திலும் மழைக்காட்சிகளில் நிஜமாகவே மழை பெய்ததென சரத்குமார் நினைவு கூறுகிறார். ஆகவே இந்த சென்டிமென்ட் இந்த படத்திற்கும் ஒர்க் அவுட் ஆகும் என எதிர் பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











