Maniratnam: ஷங்கருக்கு விருந்தளித்த மணிரத்னம்.. யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க தெரியுமா?
சென்னை: இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் மிகச்சிறந்த இயக்குநராக புகழ்பெற்றவர் இயக்குநர் மணிரத்னம்.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.
இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் லீட் கேரக்டரில் நடிக்க KH234 படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளது.

ஷங்கர் உள்ளிட்ட இயக்குநர்களுக்கு விருந்தளித்த மணிரத்னம்: இயக்குநர் மணிரத்னம் சர்வதேச அளவில் சிறப்பான இயக்குநராக பாராட்டப்படுபவர். இவரது பல படங்கள் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருபவை. தன்னுடைய படங்களில் சமூக அக்கறையை அதிகமாக பயன்படுத்தினாலும் காதலை பிரதானமாக வைத்து, அதை சுவைப்பட சொல்வதில் மணிரத்னத்தை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு இவரது படங்களில் காதல் காட்சிகள் ரசனை மிக்கதாக அமையும்.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் பொன்னியில் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. கடந்த ஆண்டில் வெளியானது பொன்னியின் செல்வன். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சில மாத இடைவெளியிலேயே இரண்டாவது பாகமும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தன்னுடைய கனவு ப்ராஜெக்ட்டான இந்தப் படத்தை தமிழின் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியிருந்தார் மணிரத்னம்.
இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் KH234 படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து நாயகன் படத்தை கொடுத்திருந்தனர். இந்தப்படம் கடந்த 198ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. KH234 படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தன்னுடைய 30 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்துள்ளதை அடுத்து ஷங்கர் உள்ளிட்ட இயக்குநர்களுக்கு மணிரத்னம் தன்னுடைய வீட்டில் விருந்தளித்துள்ளார். இதில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ஏஆர் முருகதாஸ், கௌதம் மேனன், சசி, லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டவர்களும் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் இந்த ஸ்பெஷலான மாலை நேரத்திற்கு நன்றி என்று கூறியுள்ள ஷங்கர், சிறப்பான இயக்குநர்களுடன் பழகுவது, அவர்களுடன் நினைவுகளை பகிர்ந்துக் கொள்வது சிறப்பானது என்று தெரிவித்துள்ளார். மேலும் கார்த்திக் பாடிய சில எவர்கிரீன் இளையராஜா மற்றும் ஏஆர் ரஹ்மான் பாடல்கள் இந்த தருணத்தை அழகாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறப்பான உபசரிப்பை அளித்த சுஹாசினிக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்த இயக்குநர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கின்போது வாட்ஸ்அப் மூலம் ஒன்றிணைந்த நிலையில், தற்போது மணிரத்னம் வீட்டில் விருந்து வரையில் வந்துள்ளது. இந்த விருந்தில் சுதா கொங்கரா, மிஷ்கின், வெற்றிமாறன் போன்றவர்கள் பங்கேற்க முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகச்சிறந்த இயக்குநர்களாக தங்களை வெளிப்படுத்தியுள்ள இவர்கள், எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் பழகிவருவது ஆரோக்கியமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











