மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மணிரத்னம்
சென்னை: இயக்குநர் மணிரத்னம் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று வீடு திரும்பியுள்ளார்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். அதற்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் மணிரத்னம் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய கோளாறு பிரச்சனை இருப்பதால் அது தொடர்பாக மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நலத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை, தேவையில்லாமல் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
முன்னதாக கடந்த 2014ம் ஆண்டில் மணிரத்னத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு 2015ம் ஆண்டு இதய பிரச்சனை தொடர்பாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் அறிந்ததும் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
மணிரத்னம் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் மணிரத்னம் இன்று காலை வீடு திரும்பியுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் பெரிய பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகமாக படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். அவரின் இந்த முயற்சிக்கு பாராட்டும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பொன்னியின் செல்வன் போன்ற நாவலை எல்லாம் படமாக எடுக்கக் கூடாது, எடுக்கவும் முடியாது. மேலும் மணிரத்னம் தேர்வு செய்துள்ள சில நடிகர்கள், நடிககைள் அந்த கதாபாத்திரங்களுக்கு ஒத்து வர மாட்டார்கள் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
படம் பார்ப்பவர்களுக்கே இப்படி தோன்றினால் படத்தை எடுக்கப் போகிறவர் யோசிக்காமலா செய்வார். அவர் கனவு படத்தை எடுக்கட்டுமே, பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காமல் இருப்போம்.


Click it and Unblock the Notifications











