PS2 Anthem :பிஎஸ்2 ஆன்த்தமுடன் துவங்கும் சோழர்களின் சுற்றுப்பயணம்.. உங்கள் ஊருக்கு வரும் சோழர்கள்!

சென்னை : நடிகர்கள் கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன்.

இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளது.

இதையொட்டி படக்குழுவினர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். வித்தியாசமான மற்றும் சிறப்பான அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

Director Maniratnams Ponniyin selvan 2 movie Anthem to be released today by Music director AR Rahman

பொன்னியின் செல்வன் பிரமோஷனல் டூர் : நடிகர்கள் கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் சிறப்பான வெற்றியை பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகச்சிறந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதை படம் பூர்த்தி செய்து விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தின் கதையை அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து எடுத்திருந்தார் இயக்குநர் மணிரத்னம். முன்னதாக படத்தை இயக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்காமல் போன நிலையில், தற்போது இந்தப் படத்தை சாத்தியப்படுத்தியுள்ளார் மணிரத்னம். படத்திற்கு அவர் மேற்கொண்டுள்ள கேரக்டர்களின தேர்வும் சிறப்பாக அமைந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து மொத்தமாக 155 நாட்களில் அவர் சூட்டிங்கை முடித்துள்ளார்.

Director Maniratnams Ponniyin selvan 2 movie Anthem to be released today by Music director AR Rahman

முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது பாகத்தையும அதே எதிர்பார்ப்புடன் வெளியிட படக்குழு திட்டமிட்டதன் விளைவு, படம் சில மாதங்களிலேயே தற்போது வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்கான பிரமோஷன்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. படத்தின் ஒவ்வொரு கேரக்டரின் மாற்றம் குறித்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. தொடர்ந்து படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவையும் வெளியாகி வரவேற்பை பெற்றன.

தொடர்ந்து சென்னையில் நடந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், நித்தம் ஒரு அறிவுப்புடன் தொடர்ந்து படத்தின் கவர்ச்சிகரமான அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இதன்மூலம் அவர்களது ட்விட்டர் பக்கங்கள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், இன்று மாலை பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆன்தம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வெளியிடவுள்ளார்.

Director Maniratnams Ponniyin selvan 2 movie Anthem to be released today by Music director AR Rahman

இதையடுத்து இன்றைய தினமே படத்தின் பிரமோஷனல் டூரில் படத்தின் நடிகர், நடிகைகள் துவங்கவுள்ளனர். சென்னையில் துவங்கவுள்ள இந்த பிரமோஷனல் டூர், கோயம்புத்தூர், டெல்லி, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவும் இதேபோன்று பிரமோஷன் டூர் நடத்தப்பட்டு, அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தின் ரிலீசுக்கு முன்னதாகவும் அதேபோல நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X