பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த தரமான பாடல்.. ராட்சச மாமனே எப்ப வெளியாகுது தெரியுமா?

சென்னை : நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்.

இந்தப் படத்தினை இயக்குநர் மணிரத்னம் இயக்கி லைகாவுடன் இணைந்து தயாரித்துள்ளார். வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முன்னதாக படத்தின் டீசர், 2 பாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

இயக்குநர் மணிரத்னம் பல சிறப்பான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அவரது படங்களில் நடிக்க முன்னணி நடிகர்களே மிகுந்த விருப்பத்தை காட்டுவார்கள். அந்த வகையில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் கேரியர் பெஸ்ட் படங்களை கொடுத்துள்ளார் மணிரத்னம்.

மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்ட்

மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்ட்

ஆனால் மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்ட் ஒன்று உள்ளது என்பதை அவரது பொன்னியின் செல்வன் படம் தற்போது நிரூபித்துள்ளது. இந்தப் படத்தை இரு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். 150 நாட்களில் இந்த பிரம்மாண்டமான படைப்பை அவர் உருவாக்கியுள்ளார் என்றால் இந்தக் கதையின்மீது அவர் கொண்ட காதல் எத்தகையது என்பது புலப்படுகிறது.

நட்சத்திரப் பட்டாளம்

நட்சத்திரப் பட்டாளம்

முன்னதாக பலரது கனவு பிராஜெக்டாக இருந்த இந்தப் படத்தை மணிரத்னமே முன்னதாக 2 முறை முயற்சித்துள்ளார். தற்போது இந்தப் படத்தை இயக்கி முடித்து இன்னும் சில தினங்களில் ரிலீசும் செய்யவுள்ளார். படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது.

சிறப்பு விருந்தினர்கள்

சிறப்பு விருந்தினர்கள்

முன்னதாக படத்தின் டீசர், இரு பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமான அளவில் சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடத்தப்பட்டது. தொடர்ந்து படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட்டது. இதில் கமல் -ரஜினி சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

3வது பாடல்

3வது பாடல்

இந்நிலையில் படத்தின் அடுத்தப்பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளதாக மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் அறிவித்துள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் முன்னதாக படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ள நிலையில், ராட்சச மாமனே என்ற இந்தப் பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகவுள்ளது.

லிரிக் வீடியோ பாடல்

லிரிக் வீடியோ பாடல்

முன்னதாக கார்த்தி மற்றும் விக்ரம் கேரக்டர்களின் பொன்னி நதி, சோழா சோழா பாடல்கள் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தன. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் மூன்றாவது லிரிக் வீடியோ பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராட்சச மாமனே பாடல்

ராட்சச மாமனே பாடல்

இந்தப் பாடலின் கிளிம்ப்ஸ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பாடல் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் ராட்சச மாமனே பாடலை கொண்டாடும் தினம் என்றும் கூறியுள்ளது.

சிறப்பான ஏஆர் ரஹ்மான் இசை

சிறப்பான ஏஆர் ரஹ்மான் இசை

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், அனைத்து பாடல்களிலும் தன்னுடைய உழைப்பையும் சிறப்பையும் அதிகமாக வெளிப்படுத்தியுள்ளார். கண்டிப்பாக இந்த படத்தின் வெற்றியில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கும். இந்தப் படத்திற்காக அவர் பழங்கால இசைக்கருவிகளை தேடிப்பிடித்து பாடல்களில் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X