Director Maniratnam: தக் லைஃப் பட கதைக்களத்தையே மாற்றிய மணிரத்னம்.. இதுதான் காரணமா?
சென்னை: நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இந்தக் கூட்டணி 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தக் லைஃப் படம் மூலம் இணைத்துள்ளது. இந்த படத்தில் முன்னதாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இணைந்திருந்தனர். ஆனால் கால்ஷீட் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவர்கள் படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது.
இதனிடையே படத்தில் புதிதாக சிம்பு மற்றும் அசோக் செல்வன் இணைந்துள்ளனர். துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவிக்கு பதிலாக இவர்கள் இணையவில்லை என்றும் படத்தில் கதைக்களம் புதிதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் சூட்டிங், சென்னை, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ள சூழலில் படத்தின் 50 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தக் லைஃப் படம்: நடிகர் கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வருகிறது தக் லைஃப் படம். சென்னை, ஐதராபாத், செர்பியா, டெல்லி, ஜெய்சல்மார் என அடுத்தடுத்த இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. தற்போது படத்தின் அடுத்தக் கட்ட ஷூட்டிங் சென்னையிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது 50 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கை துரிதப்படுத்தி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
விலகிய துல்கர் சல்மான் & ஜெயம் ரவி: இந்தப் படத்தில் முன்னதாக ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் கமல்ஹாசனுடன் இணைந்திருந்தனர். இந்நிலையில் செர்பியாவில் நடைபெற்ற சூட்டிங் கேன்சல் ஆனதால் ஜெயம் ரவியின் தேதிகள் வீணடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் படத்திலிருந்து விலகும் முடிவை வெளியிட்டார். முன்னதாக துல்கர் சல்மானும் கால்ஷீட் பிரச்சனையால் படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து துல்கர் சல்மான் கேரக்டரில் சிம்புவும் ஜெயம் ரவி கேரக்டரில் அசோக் செல்வனும் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவியின் கேரக்டர்களில் தற்போது சிம்பு மற்றும் அசோக் செல்வன் இணையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
வளர்ப்பு மகனாக சிம்பு: படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகியவுடன் அவர்கள் கேரக்டரையும் படத்தில் இருந்து முற்றிலுமாக மணிரத்னம் நீக்கி விட்டதாகவும் படத்தின் ஸ்கிரிப்ட்டையே அவர் முற்றிலும் மாற்றியுள்ளதாகவும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு இந்த படத்தில் களமிறங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரின் கேரக்டர்களும் படத்தில் மிகவும் அழுத்தமாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் பிரமோவில் காணப்பட்டபடி படம், பீரியட் படமாக உருவாகவில்லை என்றும் அந்த பிரமோவிற்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளன.
கேங்ஸ்டர் கதைக்களம்: இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக உருவாகிவருவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப சமீபத்தில் இந்த படத்தின் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா பட லுக்கில் கமல்ஹாசன் காணப்பட்டார். தற்போது படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கியுள்ள சூழலில் இங்கு தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு இந்த படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் இதைத்தொடர்ந்து மீண்டும் பாங்காக் மற்றும் செர்பியா என அடுத்தடுத்த இடங்களில் ஷூட்டிங் திட்டமிடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











