சிறப்பான பாடகர்... இப்போ நடிகர்... சித் ஸ்ரீராம் யாரோட டைரக்ஷன்ல நடிக்கப் போறாரு தெரியுமா?
சென்னை : கடல் படத்தின்மூலம் பாடகராக அறிமுகமாகி தற்போது முன்னணி பாடகராக உள்ளார் சித் ஸ்ரீராம்.
தற்போது இவர் நடிகராகவும் அறிமுகமாகவுள்ளார். தன்னை பாடகராக அறிமுகம் செய்த இயக்குநராலேயே இவர் நடிகராகவும் மாறவுள்ளார்.
மியூசிகல் சப்ஜக்டில் படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பாடகர் சித் ஸ்ரீராம்
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013ல் வெளியான கடல் படத்தில் இடம்பெற்ற ரொமாண்டிக் பாடலை பாடி பின்னணி பாடகராக அறிமுகமானார் சித் ஸ்ரீராம். அந்தப் பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தன்னுடைய மெஸ்மரைசிங் குரலால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார்.

வலிமை படத்தின் அம்மா பாடல்
தொடர்ந்து என்னை மாற்றும் காதலே, தள்ளிப் போகாதே, ஹே பெண்ணே உள்ளிட்ட பாடல்கள் இவரது எவர்கிரீன் பாடல்களாக அமைந்துள்ளன. சமீபத்தில் இவரது குரலில் வெளியாகியுள்ள வலிமை படத்தின் அம்மா சென்டிமெண்ட் பாடலுக்கு மிகுதியான வரவேற்பு காணப்படுகிறது.

நடிகராகவுள்ள சித் ஸ்ரீராம்
இந்நிலையில் அடுத்ததாக நடிகராகவும் மாறவுள்ளார் சித் ஸ்ரீராம். அதுவும் யாருடைய டைரக்ஷனில் தெரியுமா? இவரை பாடகராக அறிமுகம் செய்த மணிரத்னத்தின் இயக்கத்தில்தான் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படம் மியூசிக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாடகர்... இசையமைப்பாளர்... நடிகர்
தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார் மணிரத்னம். இதையடுத்து இவர் சித் ஸ்ரீராமை வைத்து படம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மணிரத்னம் படத்தில் பாடகராக அறிமுகமான சித் ஸ்ரீராம் அவரது தயாரிப்பில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் மாறியது குறிப்பிடத்தக்கது.

கதை எழுதும் ஜெயமோகன்
இந்நிலையில் மணிரத்னத்தின் மூலமே ஹீரோவாகவும் மாறவுள்ளார் சித் ஸ்ரீராம். இந்தப் படத்திற்கான கதையை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வருவதாக கூறப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படம் இந்த ஆண்டில் ரிலீசாக உள்ள நிலையில், இரண்டாவது பாகத்தை எடுப்பதற்கு முன்னதாக சித் ஸ்ரீராமை வைத்து படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











