twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமாவாசை காலு இடிக்குது… மறக்க முடியாத மணிவண்ணன்.. இன்று 65வது பிறந்த நாள்!

    |

    சென்னை: மறைந்த இயக்குனர் மணிவண்ணனின் 65வது பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம்.

    கோவை மாவட்டம் சூளூரில் பிறந்த மணிவண்ணன் கல்லூரி காலத்திலிருந்து நடிகர் சத்யராஜின் நண்பர். ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    பாரதிராஜாவின், நிழல்கள், டிக் டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய மணிவண்ணன், கோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

    உதவி இயக்குனர்

    உதவி இயக்குனர்

    இவர் சினிமாவில் சேர்ந்ததே மிக சுவாராஸ்யமான கதை. பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தைப் பார்த்த மணிவண்ணன், அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை படித்த பாரதிராஜா மணிவண்ணனை அழைத்து தன்னுடைய உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தைப் பற்றி நூறு பக்கங்களுக்கு மேல் கடிதம் எழுதியிருந்தாராம் மணிவண்ணன்.

    அருக்காணி

    அருக்காணி

    கோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படத்தில் வரும் அருக்காணி கதாப்பாத்திரம் சுகாசினிக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது. சுகாசினியின் கதாபாத்திரத்தை சுற்றி கதை பின்னப்பட்டு அதற்கு ஏற்ப கோபுரங்கள் சாய்வதில்லை என டைட்டில் வைத்திருந்தார் மணிவண்ணன்.

    கூட்டணி

    கூட்டணி

    சத்யராஜுடன் இணைந்து நடித்த பல படங்களில் இவருடைய நகைச்சுவை மிகச் சிறப்பாக இருக்கும். கோயமுத்தூர் குசும்பு, அரசியல் நையாண்டி, எதார்த்தமாக பேசும் பாணி என மணிவண்ணன் நடிப்பில் தனி பாணியை உருவாக்கி வைத்திருந்தார். சத்யராஜை வைத்து இவர் இயக்கிய அரசியல் நையாண்டி திரைப்படமான அமைதிப்படை உண்மையில் அரசியலுக்கு எதிரான அதிரடிப்படை. அப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் நடிகர்களின் பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றும் கவனிக்கத்தக்கது. வள்ளல் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பார். காலையில் எழுந்து குளித்து பட்டையடித்துக் கொண்டு முருகன் துதிபாடிக்கொண்டே அடியாட்களை திட்டுவது அவ்வளவு அழகாக இருக்கும். அதெல்லாம் மணிவண்ணனுக்கே உரிய சிறப்பு.

    முதல்வன்

    முதல்வன்

    முதல்வன் திரைப்படத்தில் இவர் ரகுவரன் கூடவே இருந்து ரகுவரனை கலாய்ப்பது, அரசியல்வாதிகள் ஏழ்மையை ஒழிக்கணும்னு நெனைக்கிறாங்க... அதுனால தான் அப்பப்போ குடிசைய கொளுத்துறாங்க" போன்ற வசனங்கள் எப்போதுமே அக்மார்க் மணிவண்ணன் டயலாக். கமல்ஹாசனின் அவ்வை ஷண்முகி திரைப்படத்தில் ஷண்முகி வீட்டை வேவு பார்க்கும் முதலியார் கதாபாத்திரத்திற்கு மணிவண்ணனைத் தவிற வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

    நடிப்பு

    நடிப்பு

    உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது அது நல்ல வரவேற்பைக் கொடுத்ததையடுத்து தொடர்ந்து நடித்தார். அப்படத்தில் "நான் உங்களை காட்டி குடுத்துடுவேன்... ஐ ஆம் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஸ் டூ எட்டப்பன்..." என டயலாக் பேசும்போது மிகச்சிறப்பாக இருக்கும்.

    அசாத்திய நடிப்பு

    அசாத்திய நடிப்பு

    மணிவண்ணனிடத்தில் கவனிக்க வேண்டியதும், நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதும் என்னவென்றால், நடிப்பு என்றாலே கெட்டப்பை மாற்றுதல், புருவத்தை உயர்த்துதல், உடல் எடையை கூட்டுதல் குறைத்தல் இன்னும் பல ல் ல் ல் ... என்று கருதும் வேளையில், இதுபோன்ற எதையுமே செய்யாமல், அதே தாடியுடன்... நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், வில்லன், பாசமான அப்பா, அண்ணன், மாமா, டான், பாஸ் என்று பல கதாபாத்திரங்களை அடித்து துவைத்து தும்சம் செய்துள்ளார் என்பது மிகப்பெரிய ஆச்சர்யம். லண்டன் திரைப்படத்தில் மொட்டையடித்து நடித்திருப்பார். உங்களுக்கு தெரிந்த கெட்டப் மாற்றி நடித்த படங்களை பட்டியலிடுங்கள்.

    English summary
    Actor Manivannan's 65th birthday today. He directed over 50 films and appeared as a actor in more than 400 films. He created an unique style in acting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X