Mano Bala : மனோபாலா மரண செய்தி கேட்டு நொறுங்கிப்போன இளையராஜா!
சென்னை : நகைச்சுவை நடிகர் மனோ பாலாவின் மரணச்செய்தி கேட்டு வேதனை அடைந்த இளையராஜா உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கல்லீரல் பிரச்னை காரணமாக கடந்த 15 நாட்களாக உடல் நலம்பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அபுசாலி தெரு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வேதனை அடைந்தேன் : மனோபாலாவின் மரண செய்தி கேட்டு வேதனை அடைந்த இளையராஜா, இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்னிடம் மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த இயக்குநர், நடிகர் மனோபாலா காலமான செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன். மனோபாலா ஆரம்பத்தில், பத்திரிக்கையாளராகவும், பாரதிராஜாவின் உதவியாளராகவும் பணியாற்றினார். பின் தனியாக படத்தை இயக்கினார்.
என்னை மகிழ்விப்பார் : மனோபாலா அனைத்து காலகட்டத்திலும் என்னை சந்தித்து இருக்கிறார். என்னை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே நான் எப்போது, காரில் வருவேன் என்று தெரிந்து கொண்டு எனக்காக பல நாட்கள் கோடம்பாக்கம் பாலத்தில் காத்து இருந்தார். பின் நாட்களில் நடிகரானாலும், படங்களை இயக்கினாலும் என்னிடம் வந்து அவ்வப்போது திரைத்துறையில் நடக்கும் விஷயங்களை சொல்லி விடுவார். ரெக்கார்டிங் நேரத்தில் சொல்லி என்னை மகிழ்விப்பார் என்று இசையானி இளையராஜா தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
பொதுமக்கள் அஞ்சலிக்காக : மனோபாலாவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அபுசாலி தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் இயக்குநர் விக்ரமன், இயக்குநர் எச் வினோத் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்
வடபழனியில் இறுதிச்சடங்கு :இவரின் மறைவுக்கு ரஜினிகாந்த்,சத்யராஜ், கமல், பாரதிராஜா, கருணாஸ், ராதிகா சரத்குமார், இயக்குநர் விக்ரமன், சீதா லட்சுமண், நடிகர் சார்லி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மனோபாலாவின் இறுதிச்சடங்கு வடபழனி மின்மயானத்தில் நாளை காலை 10.30க்கு நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











