Mano bala passes away : மனோபாலா மறைவு…அருமையான நண்பர்… ரஜினிகாந்த் இரங்கல்!
சென்னை : இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலாவின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில், துணை இயக்குனராக இருந்த மனோபாலா, சில படங்களை இயக்கியும் உள்ளார்.
இவர் ஏராளமான சீரியல்களில் நடித்தது மட்டுமில்லாமல் 200க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் : மனோபாலா இயக்குனர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி, ஒரு காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவரின் ஒல்லியான தோற்றமும், எதார்த்தமாக உடல்மொழியோடு வார்த்தைகளை வெளிப்படுத்தும் விதமும் இவருக்கு மிகப்பெரிய பிளஸாக அமைந்துவிட்டது.
ஆஞ்சியோ சிகிச்சை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நடிகராக இருந்த இவர், கடந்த ஜனவரி மாதம் இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலமானார் : உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோபாலா இன்று திடீரென காலமானார். கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தார். இவரது மறைவு செய்தியை கேட்டு திரை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி இரங்கல் : இவரது மறைவு செய்தி கேட்டு ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதில், இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.
வீட்டில் அஞ்சலி : இதே போல திரைப்பிரபலங்களான நடிகர் கருணாஸ், இயக்குநர் விக்ரமன், நகைக்சுவை நடிகர் ரவி மரியா ஆகியோர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை சாலிகிராமம் அபுசாலி தெருவில் உள்ள மனோ பாலா இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications