கடைசி நாட்களில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மனோபாலா… தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு!
சென்னை : இயக்குநரும், நடிகருமான மனோபாலா இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 69.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மனோபாலா, ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த மனோபாலா இன்றைய இளம் தலைமுறைக்கும் தெரிந்த முகமாகவே இருந்தார்.

மனோபாலா : இயக்குநர், தயாரிப்பாளர்,நகைச்சுவை நடிகர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலா 1979ஆம் ஆண்டு புதியவார்ப்புகள் படத்தில் இயக்குநர் பாரதி ராஜாவிடம் உதவியாளராக இருந்தார். 1982ஆம் ஆண்டுஆகாய கங்கை என்ற படத்தை இயக்கினார்.பின்னர்,நான் உங்கள் ரசிகன், பிள்ளைநிலா, பாரு பாரு பட்டினம் பாரு, ஊர்க்காவலன்,சிறைப்பறவை என 20 திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
நகைச்சுவை நடிகர் : இயக்கம், தயாரிப்பு என பலவற்றில் பிஸியாக இருந்த மனோபாலா பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கினார். சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 1, அரண்மனை 2 படத்தில் காமெடியில் கலக்கி இருந்தார். தமிழ் படத்தில் சிவாவுடன் காலேஜ் மாணவர் போல மிரட்டி இருந்தார்

அவதிப்பட்ட மனோபாலா : கடந்த ஜனவரி மாதம் இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோ செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த நான்கு மாதமாக வீட்டில் இருந்தே கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு வாரமாக கல்லீரல் பிரச்சனை தீவிரமானதை அடுத்து அவதிப்பட்டு வந்த மனோபாலா இன்று உயிரிழந்தார்.
இறுதிச்சடங்கு : சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவு செய்தியை கேட்டு திரை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மனோபாலாவின் இறுதிச்சடங்கு வடபழனி மின்மயானத்தில் நாளை காலை 10.30க்கு நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications











