Mamannan Twitter Review: மாரி செல்வராஜின் மாமன்னன் எப்படி இருக்கு..ட்விட்டர் ரிவ்யூ இதோ!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பரியேறும் பெருமாள் கர்ணன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் 3வது படமாக மாமன்னன் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மாறுபட்ட முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், மலையாள நடிகரும் வேலைக்காரன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படத்தில் தமிழில் நடித்தவருமான பகத் பாசில் இப்படத்தில் வில்லனாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.

மாமன்னன்: இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு ஆக்கியது. இதுவரை நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு இத்திரைப்படத்தில் மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் முற்றும் மாறுபட்டு நடித்துள்ளார். இப்படம் இன்று திரையரங்கில் வெளியான நிலையில் ரசிகர்கள் ட்விட்டரில் படம் குறித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்னர்.
எதிர்பார்த்தபடி மிரட்டல்: மாமன்னன் திரைப்படத்தின் முதல் நாள் முதல்காட்சியை பார்த்த ரசிகர் ஒருவர், இயக்குநர் மாரி செல்வராஜ் எதிர்பார்த்தபடி மிரட்டி இருக்கிறார். வடிவேலு, உதயநிதி மற்றும் பகத் பாசில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம் கர்னானெஸ்க் இன்டர்வெல் பிளாக் என பதிவிட்டுள்ளார்.
பல மடங்கு பிரமிப்பு:மற்றொரு இணையவாசி, அண்மையில் மாமன்னன் படக்குழுவின் பேட்டிகளை யூடியூபில் வெளியாகின. அத்தனை கலகலப்புகளையும் புரட்டிப் போட்டுட்டு, இந்த படம் ஆன்மாவுக்குள்ள நம்மை கூட்டிக்கொண்டு போய் இருக்கிறார். ஒரு கிரியேட்டரா மாரிசெல்வ ராஜ் பலமடங்கு பிரமிக்க வைக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

வேறலெவல் இன்டர்வல்: இன்று வெளியான மாமன்னன் படத்தை பார்த்த ஒரு நெட்டிசன்ஸ், மாமன்னன் முதல் பாதி பார்த்துவிட்டேன், ஏ.ஆர்.ரஹ்மான் இசை மற்றும் பாகத் பாசிலின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. குறிப்பாக இடைவேளை காட்சி வேறலெவல், இரண்டாவது பாதிக்காக காத்திருக்கிறேன். என்றும்,#Mamannan #Blockbuster என்று பதிவிட்டுள்ளார்.
வாழ்த்துக்கள்: சமீப காலங்களில் எந்த ஒரு படத்தை பார்த்தும் இவ்வளவு உற்சாகமாக இருந்ததில்லை. ஆனால், மாமன்னன் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உதய்ஸ்டாலின், மாரி செல்வராஜ், பகத் பாசில் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிரட்டி விட்டார்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











