ஆண் குழந்தைக்கு அப்பாவான தனுஷ் பட இயக்குநர்.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: பிரபல இயக்குநரான மாரி செல்வராஜ் ஆண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார்.
Recommended Video
பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ்.
தனது முதல் படத்திலேயே தன்னை நிரூபித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ரிலீஸுக்கு தயார்
தற்போது தனுஷின் கர்ணன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டைட்டிலில் இருந்து பாடல் வரை அனைத்தும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

ஏப்ரல் 9 ஆம் தேதி
கர்ணன் படத்தில் இருந்து இதுவரை மூன்று சிங்கிள் ட்ராக் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கர்ப்பம்
இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். மாரி செல்வராஜுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா இரண்டாவது கர்ப்பமாக இருந்தார்.

ஆண் குழந்தை
சமீபத்தில் அவருக்கு வளைக்காப்பு நடைபெற்றது. அந்த போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











