ஹேப்பி பர்த்டே மாரி செல்வராஜ்.. வாழ்த்தும் தனுஷ் ரசிகர்கள்! டிரெண்டாகும் #HBDMariselvaraj

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜின் 36வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இயக்குநர் ராமின் உதவி இயக்குநராக பணிபுரிந்த மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தனது முதல் படத்திலேயே, தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்கள் வரிசையில், தனக்கென ஒரு தனி இடத்தை மாரி செல்வராஜ் பிடித்துள்ளார்.

மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ்

தூத்துக்குடியில் உள்ள புளியங்குளத்தில் 1984ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி மாரி செல்வராஜ் பிறந்தார். மாரி செல்வராஜின் 36வது பிறந்த நாளை, நடிகர் தனுஷ் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் #HBDMariselvaraj என்ற ஹாஷ்டேக் உருவாக்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் ராம்

இயக்குநர் ராம்

இயக்குநர் ராமின் உதவி இயக்குநராக கற்றது தமிழ், தங்க மீன்கள் மற்றும் தரமணி உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர் மாரி செல்வராஜ். சினிமா மீதும் இயக்கத்தின் மீதும் இவருக்கு இருக்கும் அளவு கடந்த காதல், வெகு சீக்கிரத்திலேயே இவரை தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்கள் பட்டியலில் அலங்கரித்துள்ளது.

பா. ரஞ்சித்

பா. ரஞ்சித்

இயக்குநர் ராமின் உதவி இயக்குநராக திறம் பட செயலாற்றி வந்த மாரி செல்வராஜ், பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் சார்பில் தயாரிக்கப் பட்ட பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சமூகத்தில் நிலவும் சாதிய பிரச்சனையை மையப்படுத்தி இவர் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தனுஷுடன்

தனுஷுடன்

பரியேறும் பெருமாள் வெற்றியை தொடர்ந்து, தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தை போலவே, இந்த படமும் சமூக பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகி வருகிறதாம். கர்ணன் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடியவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இயக்குநர் மாரி செல்வராஜின் 36வது பிறந்த நாளை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டிரெண்டாகி வரும் ஹாஷ்டேக்கில், ரசிகர்கள் பலரும், மாரி செல்வராஜின் புகைப்படத்தையும், கர்ணன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தையும் பதிவிட்டு, பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கர்ணனை செதுக்கும்

மகாபாரதத்தில் குந்தியின் மூத்த மகனுக்கு கர்ணன் என்று பெயர். சிவாஜி கணேசன் கர்ணன் எனும் தலைப்பில், அந்த வரலாற்று படத்தில் நடித்துள்ளார். தற்போது, கர்ணன் எனும் தலைப்பில் தனுஷ் நடிப்பதற்கு எதிர்ப்புகளும், தலைப்பை மாற்றக் கூறி போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், எங்கள் கர்ணனை செதுக்கும் மாரியே.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இந்த கர்ணன்

கர்ணன் என்றாலே வள்ளல் குணம் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும், ஆனால், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷ்யா விஜயன், லால், யோகி பாபு நடிப்பில் உருவாகும் இந்த கர்ணன் கொடுப்பவன் அல்ல, தனது உரிமையை கேட்டு பிடுங்குபவன் என அந்த படத்தின் கதை கரு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உரிமைகளை கேட்பவன்

சினிமா எனும் கலையை ஆயுதமாக கொண்டு தன் உரிமைகளை கேட்க வந்திருக்கும் கர்ணன் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. உரக்கப் பேசு! மகிழ்ச்சி! என இந்த ரசிகர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனுஷின் கர்ணன் படத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X