இடுப்புல ஒன்னு.. கையில ஒன்னு.. கீழே ஒன்னு.. கல்யாண நாளை கலக்கலாக கொண்டாடும் இயக்குநர்!
சென்னை: பிரபல இயக்குநர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாடிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குநர் ராமின் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இவரது முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கர்ணன் என்ற படத்தை இயக்கவுள்ளார் மாரிசெல்வராஜ்.
இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ், இன்று தனது திருமண நாளை கொண்டாடியுள்ளார். மனைவி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். கணவன் மனைவி இடுப்பில் கையில் என இரு குழந்தைகளும் கீழே நிற்கும் ஒரு குழந்தை என மூன்று குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டியுள்ளார் மாரி செல்வராஜ்.
இந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மாரி செல்வராஜ், தனது மனைவி திவ்யாவின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு லவ் யூ என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











