போய் வாருங்கள் தோழர்.. ‘பூ’ ராமு மறைவிற்கு கர்ணன் பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆழ்ந்த இரங்கல்!

சென்னை: இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான 'பூ' படத்தில் சிறப்பாக நடித்த நடிகரும் எழுத்தாளருமான ராமு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரால் அன்போடு 'பூ' ராமு என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

Recommended Video

Poo Ramu Passed Away | திரையுலகினர் இரங்கல் *Kollywood | Filmibeat Tamil

இந்நிலையில், மாரடைப்புக் காரணமாக நேற்று மாலை அவரது உயில் உடலை விட்டு பிரிந்தது.

ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கர்ணன் படத்தை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

பூ ராமு

பூ ராமு

கம்யூனிச கருத்துக்களை உடையவரான ராமு சிறந்த எழுத்தாளராக இலக்கிய உலகிற்கு தனது இணையற்ற சேவைகளை புரிந்து வந்தார். இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான 'பூ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக 'பூ' ராமு என திரையுலகினரால் கொண்டாடப்பட்டார். தொடர்ந்து நீர்ப்பறவை, தங்க மீன்கள், பரியேறும் பெருமாள், சூரரைப் போற்று மற்றும் கர்ணன் என குறைவான படங்களில் இவர் நடித்தாலும், சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நின்று விட்டார்.

காலமானார்

காலமானார்

60 வயதை கடந்த நடிகர் 'பூ' ராமு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், காலையில் சென்னையில் உள்ள ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 7 மணியளவில் அவரது உயில் உடலை விட்டு பிரிந்து விட்டது. மாரடைப்பு காரணமாக பூ ராமு காலமான நிலையில், அவரது மறைவிற்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாரி செல்வராஜ் இரங்கல்

மாரி செல்வராஜ் இரங்கல்

"போய் வாருங்கள் தோழர்" என இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் 'பூ' ராமு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜின் ட்வீட்டுக்கு கீழ் பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி பேராசிரியராக 'பூ' ராமு பேசிய புரட்சிகரமான வசன காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஒரு நல்ல திரைக் கலைஞர் நம்மை விட்டு வெகு சீக்கிரத்தில் பிரிந்து விட்டாரே என பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

கர்ணனின் தந்தை

கர்ணனின் தந்தை

கர்ணன் படத்தில் தனுஷின் தந்தை கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை 'பூ' ராமு வெளிப்படுத்தி இருப்பார். எப்படியாவது தனது மகனை எந்தவொரு பிரச்சனையிலும் சிக்க விடக் கூடாது என அவசர அவசரமாக தனுஷை பட்டாளத்தில் சேர அழைத்துச் செல்லும் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் மனதில் என்றுமே மறையாமல் நிறைந்திருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X