Mari selvaraj :கண் சிமிட்டாம கமல்சார் மாமன்னன் படத்தை பார்த்தார்.. மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

உதயநிதி தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் கவனம் செலுத்தவுள்ள நிலையில், இந்தப் படம் அவரது இறுதிப்படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

Director Mari selvaraj hails Kamal and his movie devar magan in Maamannan audio launch

மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டில் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி : நடிகர் உதயநிதி, கீர்த்த சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் மாமன்னன். இந்தப் படம் உதயநிதியில் கடைசி படம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், படத்தை பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். படத்தில் உதயநிதிக்கு கீர்த்தி ஜோடியாகியுள்ள நிலையில், நடிகர் வடிவேலு இந்தப் படத்தில் மிகவும் அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, பா ரஞ்சித், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, வடிவேலு, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மிஷ்கின் உள்ளிட்டவர்கள் சிறப்புரை செய்த நிலையில், மாரி செல்வராஜும் தன்னுடைய கருத்துக்களை முன் வைத்தார்.

ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மேலும் படத்தின் சிறப்பான ட்ரெயிலரும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ் உணர்ச்சி வசப்பட்டு பேசியதை பார்க்க முடிந்தது. தான் கமல்ஹாசனுடன் இணைந்து மாமன்னன் படத்தை பார்த்ததாகவும் அப்போது கமல்ஹாசன், கண் சிமிட்டாமல் படம் பார்த்தது தன் வாழ்நாளில் மிகப்பெரிய சந்தோஷம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Director Mari selvaraj hails Kamal and his movie devar magan in Maamannan audio launch

மேலும் தன்னுடைய படங்களுக்கு உத்வேகமாக கமலின் படங்களே எப்போதும் அமைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்திற்கு முன்னதாகவும் கமலின் தேவர் மகன் படத்தை பார்த்ததாகவும் அதேபோல கர்ணன் படத்திற்கு முன்னதாகவும் தேவர் மகன் படத்தை பார்த்ததாகவும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார். இந்தப் படம் வரும் ஜூன் 29ம் தேதி ரிலீசாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தான் படத்தை பார்த்து விட்டதாகவும் அரசியல் குறித்து பேசும் நல்லப்படம் இதுவென்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய தயாரிப்பில் உதயநிதி நடிக்கவில்லை என்ற வருத்தம் தனக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், ஆனால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தப்படம் மாரி செல்வராஜ் வகை அரசியலை மட்டும் பேசாமல் உதயநிதி வகை அரசியலையும் பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X