பாசாங்கற்ற ஒரு இருள் ஓவியம்... ராக்கி படத்திற்கு பாராட்டு சொன்ன கர்ணன் இயக்குநர்

சென்னை : நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடிக்க வெளியாகியுள்ளது ராக்கி படம்.

Recommended Video

Rocky Review By Poster Pakiri | Bharathiraja, Vasanth Ravi, Nayanthara, Arum M | Filmibeat Tamil

படத்தை வெளியிட்டுள்ளனர் நயன்தாரா -விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ்.

படம் திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த பாராட்டுக்களை பெற்று வருகிறது.

ராக்கி படம்

ராக்கி படம்

நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். கடந்த 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

தன்னுடைய அறிமுக படமாக இருந்தாலும் படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும், ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக அமைத்துள்ளார் அருண் மாதேஸ்வரன். அவர் அடுத்ததாக சாணிக் காயிதம் படத்தை இயக்கியுள்ள நிலையில், தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணையவுள்ளார்.

உலக தரத்திலான படம்

உலக தரத்திலான படம்

வழக்கமான பழிவாங்கும் மற்றும் டான் படமாக அமைந்தாலும் உலக தரத்தில் படம் அமைந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். படத்தில் மணிமாறனாக, கேங்ஸ்டராக மிரட்டியுள்ளார் பாரதிராஜா. தனது மகனை கொன்ற ராக்கியின் மீதான வன்மத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.

பழிவாங்கும் கதை

பழிவாங்கும் கதை

தனது அம்மாவை கொன்ற மணிமாறனின் மகனை கொல்வதும், காணாமல் போன தனது தங்கையை தேடுவதும், அதன் பரிதவிப்பை சிறப்பாக வெளிப்படுத்துகிறார் வசந்த் ரவி. ரத்தம் சொட்ட சொட்ட திரைக்கதையை அமைத்துள்ளார் அருண் மாதேஸ்வரன்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளான நிலையில், தற்போது படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இளகிய மனம் கொண்டவர்களுக்கான படம் இதுவல்ல என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மாரி செல்வராஜ் பாராட்டு

மாரி செல்வராஜ் பாராட்டு

இந்நிலையில் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கி வரவேற்பை பெற்ற மாரி செல்வராஜ் ராக்கி படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். மனித மனங்களின் எல்லையற்ற பழி உணர்ச்சியை பாசாங்கற்ற ஒரு இருள் ஓவியமாக்கி வெற்றி பெற்றுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

ரவுடி பிக்சர்ஸ் நன்றி

ரவுடி பிக்சர்ஸ் நன்றி

மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்களையும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே மாரி செல்வராஜின் இந்த பாராட்டிற்கு ரவுடி பிக்சர்சும் நன்றி தெரிவித்துள்ளது. படம் வெளியாகி இரு தினங்களில் சிறப்பான வசூலையும் பாராட்டுக்களையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X