அவசியமானதை முன்னெடுத்து நகரும் சூர்யா... மாரி செல்வராஜ் வாழ்த்து!
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படம் நாளைய தினம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே அதிகமாக உள்ளது.
இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவசியமான நேரத்தில் தயங்காமல் முன்னெடுத்து நகரும் சூர்யாவிற்கு அவர் வாழ்த்துக்களையும் பிரியங்களையும் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் ஜெய் பீம்
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம். இந்தப் படத்தில் முதல் முறையாக சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களின் உரிமைக்காக அவர் போராடுவதாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தை இயககியுள்ளார் டிஜே ஞானவேல்.

சூர்யா தயாரிப்பு
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. நாளை இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரெஜிஷா விஜயன், லிஜோ மோல் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Recommended Video

கேரக்டர் குறித்து சூர்யா விளக்கம்
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் 240 நாடுகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. நீதிபதி சந்துருவை இன்ஸ்பிரேஷனாக கொண்டு இந்தக் கேரக்டரில் தான் நடித்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்ட செட்
இந்தப் படத்திற்காக உயர்நீதிமன்றம் போன்று மிகப்பெரிய செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளதாக சூர்யா மேலும் கூறியுள்ளார். நாளைய தினம் படம் ரிலீசாக உள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு பாராட்டுக்களையும் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மாரி செல்வராஜ் பாராட்டு
இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவசியமான அவசியமான நேரத்தில் தயங்காமல் முன்னெடுத்து நகரும் சூர்யாவிற்கு அவர் வாழ்த்துக்களையும் பிரியங்களையும் தெரிவித்துள்ளார்.

படக்குழுவிற்கு வாழ்த்து
மேலும் ஜெய்பீம் வெல்லட்டும் என்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கதிர் நடிப்பில் பரியேறும் பெருமாள் மற்றும் தனுஷ் நடிப்பில் கர்ணன் ஆகிய படங்களை இயக்கி மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளவர் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











