கர்ணன் மாதிரி ஒரு ஹிட் படம்..மாரி செல்வராஜின் அடுத்த பட அறிவிப்பு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை : இயக்குநர் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்தை பெற்று இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். தனது முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரை உலகின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
மனித மனங்களில் சாதி புரையோடிப் போயிருப்பதை முகத்தில் அறைந்தாற்போல சொல்லிய இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

பரியேறும் பெருமாள்
பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்த கர்ணன் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். இருகிராமங்களுக்கு இடையே சாதி பிரச்சனையை அடிப்படையாக வைத்து உருவான இப்படத்தில், இதிகாச கதாபாத்திரங்களின் பெயரை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வைத்திருந்தார். இந்த படத்தில் தனுஷின் நடிப்பு அனைவரும் வாயடைத்து போகும் அளவுக்கு தரமாக இருக்கும்.

கர்ணன்
கர்ணன் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த மாதம் பூஜை
இந்தப் படத்தை அடுத்து டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்காக வெப் தொடர் ஒன்றை அவர் இயக்க இருக்கிறார். இதில், கலையரசன் நாயகனாக நடிக்கிறார். திருநெல்வேலி அருகே இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருப்பதாகவும். இதற்கான பூஜை வரும் நவம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.

மாஸ் அப்டேட்
இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில், வாழை இலைக்கு நடுவே நான்கு சிறுவர்கள் ஓடும் காட்சி இடம் பெற்றுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











