Mari Selvaraj: வாழை படம் ரிலீசானா போதும்.. வெற்றி குறித்து யோசிக்கவில்லை.. மாரி செல்வராஜ் பளீர்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் கோலிவுட்டில் கவனத்தை பெற்றவர். வெற்றிப்பட இயக்குநராக வலம்வந்துக் கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரும் 23ம் தேதி வாழை படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர் வெளியாகி மிரட்டலாக அமைந்துள்ளது.

மாமன்னன் படத்திற்கு பிறகு வாழை படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இதை தன்னுடைய நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் அவரே தயாரித்தும் உள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Mari Selvaraj Vaazhai movie tamil cinema

இயக்குநர் மாரி செல்வராஜ்: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி, ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். அடுத்ததாக வாழை படத்தை இயக்கி முடித்துள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகியுள்ள நிலையில் படத்தை தன்னுடைய நவ்வி ஸ்டுடியோ சார்பில் மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். மேலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரும் இணைந்து தயாரித்துள்ள வாழை படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

ரிலீசில் தாமதம்: கடந்த 2022ம் ஆண்டில் ஆண்டின் இறுதியிலேயே வாழை படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் படத்தை திரையிடுவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. தற்போது அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வரும் 23ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசை அமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலரும் வெளியிடப்பட்டுள்ளது.

உண்மை சம்பவங்கள்: இந்த படத்தின் கதைக்களம் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக மாரி செல்வராஜ் தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இந்தப்படத்தின் வெற்றி குறித்து தனக்கு எந்த விதமான பதட்டமும் இல்லை என்றும் இந்த படம் ரிலீசானாலே போதுமானது என்று தான் நினைத்ததாகவும் அவர் இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தை தன்னுடைய அப்பா, அம்மா மற்றும் சொந்த பந்தங்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பது குறித்து தனக்கு பதட்டம் இருந்ததாகவும் கூறியுள்ளார். படத்தில் தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

யாரும் ஏற்க மாட்டார்கள்: வாழை படத்தை பார்க்கும் போது அவர்கள் அனைவரும் இந்த கதையை எப்படி எதிர்கொள்வார்கள் என்றும் தான் யோசிப்பதாக மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். படத்தில் அவர்களுக்கு தெரிந்த கதையும் உள்ளது, தெரியாத கதையும் உள்ளது என்று கூறியுள்ள மாரி செல்வராஜ், இது போன்ற ஒரு கதையை தான் தமிழ் சினிமாவில் பதிவு செய்து விட்டதாகவும் அதன் வெற்றி குறித்து கவலை இல்லை என்றும் அவர் மீண்டும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உள்ளவரை வாழை படமும் கண்டிப்பாக நிலை பெற்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை பார்த்தால் தன்னை சேர்ந்தவர்கள் யாரும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X