Mari Selvaraj: என் படம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்.. மாரி செல்வராஜ் பேட்டி!

சென்னை: என் படம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் பக்ரீத் திருநாளை யொட்டி இன்று வெளியானது. இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு,பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அண்மையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால், நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்த அவர் மாமன்னன் தான் கடைசி படம் என அறிவித்திருந்தார். எனவே அவரது கடைசி படமான மாமன்னன் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது.

மாமன்னன்: கடந்த சில மாதங்களாகவே இணைய தளம், ஊடகம்,பத்திரிக்கை என எதை எடுத்துக்கொண்டாலும் மாமன்னன் படம் குறித்த பேச்சாகவே இருந்தது. மேலும், படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தேவர் மகன் திரைப்படம் தனக்கு வலியை கொடுத்ததாக மாரி செல்வராஜ் பேசியது விவாதப் பொருளாகி இணையத்தையே அலறவைத்தது. இதனால்,ஒட்டுமொத்த ரசிகர்களும் அப்படி படத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.

Director mari selvaraj press meet about maamannan movie

நல்ல விமர்சனம்: இதையடுத்து இன்று வெளியான படத்திற்கு ட்விட்டர் விமர்சனம், பொதுமக்கள் விமர்சனம் என பாசிடிவ் விமர்சனங்களே வந்து கொண்டு இருக்கிறது. மாரிசெல்வராஜ் சம்பவம் செய்துவிட்டதாகவும் கிழிகிழி என்று கிழித்துவிட்டதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாரிசெல்வராஜ் பேட்டி: இந்நிலையில் சென்னை காசி திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த மாரி செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது என்னுடைய 3வது படம் இன்று வெளியாக உள்ளது. இந்த படம் உருவாக காரணமாக இருந்த உதயநிதி ஸ்டாலின், வடிவேலு,பகத் பாசில், ஏ.ஆர்.ரஹ்மான் என அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய எமோஷன்: இந்த படத்தில் என்னுடைய எமோஷன், நிச்சயமா ஒரு நல்ல படமாகவும் முக்கியமான படமாகவும் இருக்கும். மக்கள் இப்படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு கொடுத்திருக்காங்க. அதன் நோக்கத்தையும் தேவையையும் கண்டிப்பா இப்படம் பூர்த்தி செய்யும். படம் குறித்து எழுந்த பல சர்ச்சைகளுக்கு படம் நிச்சயம் பதில் சொல்லும். படம் மக்களை வெல்லும் என நம்புகிறேன். மக்கள் சொல்லும் கருத்து தான் நிஜமானது. உதயநிதி அவருடைய கடைசி படம் என்று தான் என்னை அழைத்திருந்தார். அவர் எதற்காக என்னை அழைத்தாரோ அப்படி ஒரு நல்ல படமா மாமன்னன் இருக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X