Vaazhai collection: கொஞ்சமும் குறையாத வாழை வசூல்.. 9 நாட்களில் செய்த மொத்த கலேக்ஷன்!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் வாழை, சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என அனைவரை பாராட்டினர். இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு பத்து நாட்கள் ஆகி உள்ள நிலையில் இப்படம் வசூலித்துள்ள மொத்த வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நான்காவது திரைப்படமாக உருவாக திரைப்படம் வாழை. இந்த படத்தில், குழந்தை நட்சத்திரமாக பொன்வேல், ராகுல் ஆகியோர் உணர்வுபூர்வமாக நடித்திருந்தனர். மேலும், கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல், ஜெய் சதீஷ் குமார், ஜானகி என மற்றும் பலர் நடித்துள்ளனர். 'வாழை' படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பாலா, மாரி செல்வராஜை கட்டித்தழுவி கலங்கி பாராட்டி இருந்தார்.

வாழை கதை: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பொன்வேல், படித்துக்கொண்ட வார விடுமுறை நாட்களில், வாழைக்காய் சுமந்த தனது குடும்பத்திற்கு உதவியாக இருக்கிறான். ஆடுவது, ஓடுவது, பாடுவதுமாக இருக்கும் இந்த சிறுவனுக்கு வாழை சுமப்பது பிடிக்காததால், அதற்காக பல மொய்களை சொல்லுகிறான். இந்த நேரத்தில் தான் தொழிலாளர்கள் கூலியை உயர்த்தி போராட்டம் நடத்துகின்றனர். இதனால், வேறு வழியில்லாமல் வியாபாரி கூலியை உயர்த்தி வருகிறார். இதனால், அந்த வியாபாரி வேறுவிதமான பிரச்சனைகளை அந்த தொழிலாளர்களுக்கு கொடுக்கிறார்கள். அதில் இருந்து அந்த ஏழ்மையான குடும்பம் மீட்டு வந்தா என்ன என்பதுதான் வாழை படத்தின் கதை.
அலைமோதும் கூட்டம்: அந்த படத்தை கதை என்று சொல்வதைவிட மாரிசெல்வராஜ் தனது சிறுவயதில் சந்தித்த வலி, அனுபவித்த ரணத்தை படத்தில் அழகாக காட்டி உள்ளார். இத்தனை நாள் நம் வாழ்க்கையில் எதார்த்தமாக கடந்து வந்த விஷயத்தை மாரி செல்வராஜ் சற்று நின்று கண்ணீரோடு திரும்பிபார்க்க வைத்துள்ளார். படத்தை பலர் பாராட்டி வரும் நிலையில், மக்களிடம் இருந்தும் ஆதரவு குவித்துவருவதால், தியேட்டரில் மக்கள் கூட்டம் குவித்து வருகிறது.
படத்தின் மொத்த வசூல்: கடந்த23ந் தேதி தியேட்டரில் வெளியான இப்படம் முதல் நாளில், 1.15 கோடியை வசூலித்த நிலையில் இரண்டாம் நாளில் 2.5 கோடியாக அதிகரித்தது. மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தின் வசூல் இரண்டு மடங்காக அதிகரித்து 4 கோடியாக இருந்தது. இன்றோடு படம் வெளியாகி பத்து நாட்கள் ஆகி உள்ள நிலையில் படத்தின் வசூல், 16.58 கோடியாக உள்ளது. இந்த வாரம் 5ந் தேதி கோட் படம் வெளியாக உள்ளது. அது வரை எந்த பெரிய படமும் போட்டிக்கு இல்லாததால், வாழை படம் இன்றும் நன்றாக கல்லாக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











